Priya Atlee Pregnant: அப்பாவாகப்போகும் அட்லீ..! இன்ஸ்டாவில் பிரியா நெகிழ்ச்சி போஸ்ட்! ரசிகர்கள் வாழ்த்து..
திரையுலகின் பிரபல தம்பதிகளான அட்லீ-ப்ரியா தங்களது எட்டாம் ஆண்டு திருமண நாளை கடந்த மாதம் கொண்டாடினர்.
தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த இளம் இயக்குநர் அட்லீ. ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், அதைத்தொடர்ந்து முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இயக்கியது நான்கு படங்கள் என்றாலும், அனைத்துமே பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றதால், இன்று தமிழ் முன்னணி இயக்குநராக அவர் மாறியிருக்கிறார்.
View this post on Instagram
இயக்குநர் அட்லீ தனது நெருங்கிய தோழி பிரியாவை கடந்த 2015 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சீரியல்கள், குறும்படங்கள் மற்றும் வெள்ளித்திரையில் சில திரைப்படங்களில் துணைக்கதாபாத்திரங்களில் பிரியா நடித்திருக்கிறார்.குறிப்பாக, சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாக துணை கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். எனது வெற்றியில் மனைவி பிரியாவின் பங்களிப்பு அதிகம் என பல நேர்காணல்களில் அட்லீயே குறிப்பிட்டு இருக்கிறார்.
கடந்த மாதம் அட்லீ ப்ரியா தம்பதி, தங்களது எட்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். இந்நிலையில் இன்று தாங்கள் இருவரும் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
View this post on Instagram
இது குறித்து அவர்கள் பதிவிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், ''எங்களது குடும்பம் வளர்ச்சி அடைகிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம். ஆம் ! நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம். இந்த அழகான பயணம் முழுக்க உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு வேண்டும். அன்புடன் அட்லீ, பிரியா மற்றும் பெக்கி'', என தங்களது செல்ல நாய்க்குட்டியுடன் அட்லீ பிரியா தம்பதி இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும் ப்ரியா அட்லீ கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களும் அதில் இடம் பெற்று இருக்கிறது.