மேலும் அறிய

HBD Priya Anand : உன் கைகள் கோர்த்து... உன்னோடு போக… ப்ரியா ஆனந்த் பர்த்டே இன்னைக்கு.. இதெல்லாம் தெரியுமா?

HBD Priya Anand : தென்னிந்திய சினிமாவில் வெரைட்டி காட்டக்கூடிய நடிகையான பிரியா ஆனந்த் பிறந்தநாள் இன்று

தமிழ் திரையுலகில் அறிமுகமான நாள் முதல் இன்று வரை இளமை குறையாமல் அதே துள்ளலுடன் இருந்து வரும் நடிகைகளில் ஒருவரான பிரியா ஆனந்த் 37வது பிறந்தநாள் இன்று. 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ள பிரியா ஆனந்த் அறிமுகமானது தமிழ் மற்றும் என தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் அறிமுகமானார். 2009ம் ஆண்டு தமிழில் வெளியான 'வாமனன்' மற்றும் தெலுங்கில் வெளியான 'லீடர்' திரைப்படத்தில்.

HBD Priya Anand : உன் கைகள் கோர்த்து... உன்னோடு போக… ப்ரியா ஆனந்த் பர்த்டே இன்னைக்கு.. இதெல்லாம் தெரியுமா?

நம்ம தமிழ்நாடு பொண்ணு :

2012ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' திரைப்படத்தில் அல்ட்ரா மாடர்ன் லுக்கில் ஆச்சு அசலாக அமெரிக்க பெண்ணை போல தோற்றமளிக்கும் துணை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். மயிலாடுதுறையில் பிறந்த இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மட்டுமின்றி ஆங்கிலம், மராத்தி, பெங்காலி, ஸ்பானிஷ்  மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர். 

அமெரிக்காவில் அல்பானி பல்கலைக்கழகத்தில் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஜர்னலிசம் பட்டப்படிப்பை முடித்த பிரியா ஆனந்த் இந்தியா திரும்பியதும் மாடலிங் துறையில் நுழைந்து டைரி மில்க், மகா லாக்டோ, பிரின்ஸ் ஜூவல்லரி என  ஏராளமான விளம்பரங்களில் நடித்து வந்தார்.

வெரைட்டி காட்டக்கூடியவர் : 

மாடர்ன் கேர்ள், குடும்ப பாங்கான கதாபாத்திரம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடிக்க கூடிய பிரியா ஆனந்த் நடித்த எதிர் நீச்சல், எல்.கே.ஜி, வணக்கம் சென்னை உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தன. மேலும் அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல இரண்டு ராஜா, திரிஷா இல்லனா நயன்தாரா, ஆதித்ய வர்மா உள்ளிட்ட திரைப்படங்களிலும் ஹீரோயினாக முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்திருந்தார். கிடைக்கும் படங்களை எல்லாம் நடிக்காமல் அனைத்து மொழிகளிலும் படங்களை தெளிவாக தேர்ந்து எடுத்து அனைத்து நடித்து வருகிறார். 

HBD Priya Anand : உன் கைகள் கோர்த்து... உன்னோடு போக… ப்ரியா ஆனந்த் பர்த்டே இன்னைக்கு.. இதெல்லாம் தெரியுமா?
நித்யானந்தா குறித்து பரபரப்பு : 

சோசியல் மீடியாவில் என்றுமே ஆக்டிவாக இருக்கும் பிரியா ஆனந்த் கடந்த ஆண்டு பேஸ்புக்கில் நித்யானந்தா குறித்து வெளியிட்ட போஸ்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நித்யானந்தாவிடம் ஏதோ இருக்கிறது. அவருக்கு மக்களை ஈர்க்கும் சக்தி இருக்கிறது. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை நான் திருமணம் செய்து கொண்டால் என்னுடைய பெயரை மாற்ற வேண்டும் என்ற அவசியம் கூட இருக்காது என சொல்லி நெட்டிசன்களை எல்லாம் வாட்டியெடுத்தார்.   

லியோ இடத்தில் பிரியா ஆனந்த் :

தமிழ் திரைப்படைகள் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியா ஆனந்த். லியோ படத்திற்கு பிறகு பிரியா ஆனந்துக்கு பட வாய்ப்புகள் எகிறும் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

ஹேப்பி பர்த்டே பிரியா ஆனந்த் !

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Embed widget