மேலும் அறிய

பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கலக்கல் கூட்டணியில் வெளியான மூன்வாக் பட பாடல்

ஒரு திரைப்பட ஆல்பத்திற்காக முதல்முறையாக வெளியான ‘மூன்வாக் மினி கேசட்’ ( Moonwalk Mini Cassette ) — ஒரு சிறப்பு இசை அனுபவம்  !! 

மூன்வாக் மினி கேசட்

Behindwoods Productions நிறுவனம், மூன்வாக் படத்தின்  மினி கேசட்டை யூடுயூபில் வெளியிட்டுள்ளது. இது ஒரு திரைப்படத்திற்காக தமிழ் திரையுலகில்  இதுவரை யாரும் செய்திடாத ஒரு தனித்துவமான இசை அனுபவமாகும். மூன்வாக் திரைப்படத்தின் அனைத்து 5 பாடல்களையும் A R ரஹ்மான் பாடியுள்ளார். இது அவரது இசைப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சாதனையாகும். மூன்வாக் திரைப்படம் 2026 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக ஒரு பாடலை A R ரஹ்மான்  பாடியிருந்தாலே ரசிகர்கள் கொண்டாடும் நிலையில், மூன்வாக் மினி கேசட் அந்த அனுபவத்தை இன்னும் உயர்த்துகிறது. யூடுயூபில் ஒரே வீடியோவாக, ஆல்பத்தில் உள்ள அனைத்து 5 பாடல்களையும் தலா 1 நிமிட பீட்ஸாக இணைத்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் முழு ஆல்பத்தையும் தொடர்ச்சியாக, ஒரே அமர்வில் ரசிக்க முடிகிறது.  இது இசை ரசிகர்களுக்கு புதுமையான, ஒப்பற்ற மற்றும் முழுமையான இசை அனுபவத்தை வழங்குகிறது.

ஒரு முழுநீள திரைப்படம் இதுபோன்ற ஒரு இசை அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குவது இதுவே முதல் முறை.

மூன்வாக் திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் மிகுந்த சிறப்புடன் கையாளப்பட்டுள்ளது. திரைப்படத்தின் இயக்குநர் மனோஜ் நிர்மலா ஶ்ரீதரன், ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியான போஸ்டர்களை வெளியிட்டு, அந்த பாடலின் தீம்  மற்றும் தத்துவத்தை தெளிவாக விளக்கியதோடு, அந்தப் பாடலுடன் தொடர்புடைய பாடலாசிரியர்கள் மற்றும் நடன அமைப்பாளர்களுக்கும் உரிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளார். இன்றைய திரைப்பட விளம்பரங்களில் அரிதாகக் காணப்படும் ஒரு நடைமுறையாக இது விளங்குகிறது.

ஏ.ஆர். ரஹ்மானின் காலத்தால் அழியாத இசை, பிரபுதேவாவின் நடன மாயாஜாலம் மற்றும் மனோஜின் சினிமா உருவாக்கம்  — இவை அனைத்தும் ஒன்றிணைந்து, மூன்வாக் திரைப்படம்  அனைத்து தலைமுறையினரையும் கவரக்கூடிய ஒரு முக்கியமான இசை திரைப்படமாக அமைந்துள்ளது. 

திரைப்படம் குறித்து மனோஜ் கூறியதாவது:
“மூன்வாக் ஒரு முழுநீள நகைச்சுவை திரைப்படம். ஆனால் அதே சமயம், இதில் இசை, பாடல் உருவாக்கம் மற்றும் நடன அமைப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய திரைப்படத் துறையின் இரண்டு மிகப் பெரிய ஆளுமைகளை ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக,  மீண்டும் ஒன்றாக இணைத்துள்ளது.”

மினி கேசெட் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், மூன்வாக் திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா ஜனவரி 4 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Embed widget