Mani Ratnam : ‛எங்களுக்கான கதவுகளை திறந்தவர் ராஜமெளலி’ -புகழ்ந்து தள்ளிய மணிரத்னம்
இவரிடம் இருந்துதான் மற்ற இயக்குநர்கள் திரைப்படங்களை இரண்டு பாகங்களாக இயக்கும் தைரியத்தினை பெற்றனர். ராஜமெளலி எங்களுக்கான புதிய கதவுகளை திறந்து வைத்துள்ளார் - மணிரத்தினம்
இயக்குநர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிளாக சோழ சோழா என்ற பாடல் வெளியானது. போரில் வெற்றிக்கொண்ட ஆதித்த கரிகலான் கொண்டாட்டத்தை அடிப்படையாக கொண்டு இப்பாடல் இயக்கப்பட்டுள்ளது. வரி வரிப்புலி அஞ்சாதடா...துஞ்சாதடா என வீரம் பொங்கும் வரிகள் இப்பாடலில் இடம்பெற்றுள்ளது.
பாடல் வெளியீட்டுக்கு கூட நிகழ்ச்சி வைத்து கொண்டாடும் காட்சிகளை எல்லாம் இந்தியாவில்தான் நடக்கும்.
அந்தவகையில், நேற்று நடந்த பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மணிரத்தினம், நடிகர் சிரஞ்ஜீவி மற்றும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி பற்றி புகழ்ந்து பேசினார்.
சிரஞ்ஜீவியை எதற்காக பாராட்டினார் என்பது விளங்கவில்லை அதற்கு ஏற்றது போல் அவரும் எந்த காரணமும் கூறவில்லை. ஆனால் ராஜமெளலியை பற்றி பேசும்போது, “அவர் ஒரு சிறந்த இயக்குநர், இவரிடம் இருந்துதான் மற்ற இயக்குநர்கள் திரைப்படங்களை இரண்டு பாகங்களாக இயக்கும் தைரியத்தினை பெற்றனர். ராஜமெளலி எங்களுக்கான புதிய கதவுகளை திறந்து வைத்துள்ளார். இப்படிப்பட்ட படங்களையும் இயக்க முடியும். அப்படி எடுத்தாலும் படம் வெற்றிகரமாக ஓடும். இது அனைத்தும் பாகுபலி படத்தினால் சாத்தியம் அடைந்தது. அதனால் இந்த சமயத்தில் எனது மனமார்ந்த நன்றியை ராஜமெளலி அவர்களுக்கு தெரிவித்துகொள்கிறேன். ” என்று அவரின் கருத்தை வெளிப்படுத்தினார். தற்போது பொன்னியின் செல்வன் முழு படப்பிடிப்பினை எடுத்து முடித்த இயக்குநர் மணிரத்தினம் இதனை கூறியிருக்கிறார். அதனால் இப்படத்தை இயக்க கடின உழைப்பை முதலீடு செய்துள்ளனர் என்பது நன்றாக தெரிகிறது.
View this post on Instagram
பொன்னியின் செல்வன் படக்குழுவினர் வெளியிடும் அடுத்தடுத்த அப்டேட்களை பெற்ற ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்துள்ளனர். கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழா கடந்த ஜூலை 8 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் பிரமாண்டமாக நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.