Valimai: வலிமை திரைப்படத்திற்கு எதிராக வழக்கு… போனி கபூர், எச்.வினோத் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்! காரணம் என்ன?
அத்திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில் வழக்கறிஞர்களை குற்றவாளிகளை போல் சித்தரித்தும், குற்றச் வழக்கறிஞர்களை குண்டர்களாக வழக்கறிஞர்கள் செயல்படுவது போலவும் காட்சிப்படுத்தியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
சமீபத்தில் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தியதாக அந்த படத்தின் இயக்குநர் வினோத், மற்றும் அந்த போனி கபூர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அஜித் நடிப்பில் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியான திரைப்படம் 'வலிமை' ஆகும். இந்த திரைப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படம் கடந்த 24-ஆம் தேதி வெளியானது. செயின் பறிப்பு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் பைக் ரேசிங் குழுவை, அஜித் போலீஸ் அதிகாரியாக தேடிக் கண்டுபிடிப்பதை படத்தின் ஒரு வரி கதையாக எடுத்துக்கொண்டு, ஹெச் வினோத் படத்தை முழுக்க முழுக்க பைக் ரேசிங் காட்சிகளின் பின்னணியில் உருவாகியுள்ளார். படம் வெளியாகி நான்கு நாட்களை கடந்த நிலையில், தற்போது படமானது தமிழகத்தில் ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது. எனினும் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்தில் அம்மா சென்டிமென்ட், ஆக்ஷன் காட்சிக்கு இடையிடையே, சென்டிமென்ட் காட்சிகள் என படத்தின் வேகத்தை குறைத்ததால், இரண்டாவது நாளே படத்தில் 14 நிமிடங்கள் வெட்டப்பட்டு வெளியானது. அதன்பிறகு படம் பலரிடையே நல்ல விமர்சமங்களை பெற்றது. படத்தின் மையக் கருவும், சமுதாயத்திற்கு போதைப்பொருளுக்கு எதிராக பேசியுள்ளதால், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல திரையரங்குகளில் முழு இருக்கையுடன் ரசிகர்கள் படம் பார்த்து வருவதால், வலிமை படமானது இன்னும் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வலிமை படத்தின் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தியதாக அந்த படத்தின் இயக்குநர் வினோத், மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மீது நடவடிக்கை தயாரிப்பாளர் வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உயர் நீதிமன்றப் பெண் வழக்கறிஞர் சாந்தி நேற்று (பிப்.28) புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தி உள்ளதாகவும், அத்திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
‘கடந்த 24 ஆம் தேதி வலிமை திரைப்படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் சென்று பார்த்ததாகவும், அப்போது அத்திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில் வழக்கறிஞர்களை குற்றவாளிகளை போல் சித்தரித்தும், குற்றச் வழக்கறிஞர்களை குண்டர்களாக வழக்கறிஞர்கள் செயல்படுவது போலவும் காட்சிப்படுத்தியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். சமூகத்தில் பொறுப்புள்ள ஒரு பணியை ஆற்றி வரும் வழக்கறிஞர்களை இழிவுப்படுத்தி காட்சியமைப்பதும், ஒருசில வழக்கறிஞர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட, ஒட்டுமொத்த வழக்கறிஞர்களையும் தவறாக காட்டுவதும் கண்டனத்துக்கு உரியது. காவல்துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த புகாரில் கூறி இருக்கிறார். மேலும் பேசிய அவர், எத்தனை சினிமா நடிகர், நடிகைகள் அவர், வழக்கில் சிக்கியுள்ளனர். அதை மையமாக வைத்து எந்தத் தயாரிப்பாளரும், இயக்குநரும் ஏன் படம் எடுக்கவில்லை?” என கேள்வி எழுப்பினார்.
மேலும் இப்புகாரில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஏற்கனவே நெகட்டிவ் ரிவ்யூக்களால் பிரச்சனையை சந்தித்து வரும் திரைப்படத்திற்கு மேலும் ஒரு பிரச்சனை முளைத்துள்ளது. இதற்கு முன்னதாக இதே போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வெளியாகி இருந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடிகர் அஜித் வழக்கறிஞராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.