Flashback | புது இயக்குநருக்கு பாடல் எழுதுனா இப்படித்தான்... முருகதாஸை வறுத்தெடுத்த கவிஞர் வாலி.. ஒரு ஃப்ளாஷ்பேக்..
"வத்தி குச்சி பத்திக்காதுடா” என்ற பாடலை எழுதுவதற்காக இவர் கவிஞர் வாலியிடம் சென்று, சிச்சுவேஷன் சொல்லி விட்டு வந்தாராம். இதன் பிறகு இந்த பாடலை வாங்க சென்றபோது அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
60களில் தமிழ் கலைஞரும், முன்னணி திரைப்பட பாடலாசிரியராக விளங்கிய கவிஞர் வாலி, திரைப்படங்களில் கிட்டத்தட்ட 15,000 பாடல்களுக்கு மேலாக எழுதி சாதனை புரிந்தவர். இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ‘கையளவு மனசு’ என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்திருக்கிறார். அவருக்கு பல சினிமா கலைஞர்களுடன் நட்பும் சண்டையின் இருந்துள்ளது. அதில் இயக்குனர் முறுகதாஸை திட்டியதாக அவர் கூறிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் முருகதாஸ். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இருந்த போதிலும் கடந்த சில வருடங்களாக இவர் இயக்கும் படங்கள் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து, இவர் தன்னுடைய அடுத்த படத்திற்கு ஹீரோ யார் என தெரியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் பற்றிய செய்தி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி, இவர் இயக்கத்தில் வெளியான ”தீனா” படத்தில் இடம்பெற்ற ”வத்தி குச்சி பத்திக்காதுடா” என்ற பாடலை எழுதுவதற்காக இவர் கவிஞர் வாலியிடம் சென்று, இந்த பாடலுக்கான சந்தர்ப்பத்தையும் அவரிடம் சொல்லி விட்டு வந்தாராம். இதன் பிறகு இந்த பாடலை வாங்க சென்றபோது அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட சம்பவத்தில் கவிஞர் வாலி இதனால் தான் புதுமுக இயக்குனர்களுக்கு நான் பாடல் எழுதுவதே இல்லை என கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நேர்காணலில் வாலி பேசியவை, "தீனா படம்தான் அவனுக்கு முதல் படம். அதுக்கு என் கிட்ட பாட்டு எழுத வர்றான், யுவன் ஷங்கர் ராஜா ட்யூனோட வர்றான். நான் முருகதாஸ பாக்குறேன். நீயா டைரக்டர்ன்னு கேட்டேன் ஆமாம் நான்தான் டைரக்டர் ன்னு சொன்னான். யார்ட்ட இருந்தன்னு கேட்டேன், இந்தமாதிரி எஸ்.ஜே.சூர்யா கிட்ட இருந்தேன்னு சொன்னான். அப்புற என்ன சிச்சுவேஷன்னு கேட்டேன், ஹீரோ ஒரு ரவுடி, அவர் பாடுறார் சார், ஒரு இன்ட்ரோ சாங் சார்ன்னு சொன்னான், அப்புறம் எழுதி வைக்குறேன் வான்னு சொன்னேன், போய்ட்டான். ஒரு 10 நாள் கழிச்சு கால் பண்ணி பாட்டு ரெடி வான்னு சொன்னேன், வந்தான். நான் பாடி காமிச்சேன், "வத்திக்குச்சி பத்திக்காதுடா, யாரும் வந்து ஒரசுர வரையில… வம்புதும்பு வச்சுக்காதடா, யாரும் வந்து உசுப்புற வரையில" ன்னு பாடுறேன். அத கேட்டுட்டு அப்படியே உக்காந்துருக்கான், ஒரு ரியாக்ஷனும் இல்ல. 'இதுக்குதான் புது டைரக்டர்கிட்டலாம் வச்சுக்க கூடாது, பாட்டு நல்லாருந்தா நல்லாருக்குன்னு சொல்லு, நல்லா இல்லனா நல்லா இல்லன்னு சொல்லு, இதென்ன பைபிளா மாத்தக்கூடாதுன்னு சொல்றதுக்கு… நல்லா செத்தவன் கைல வெத்தலபாக்க கொடுத்த மாதிரி உக்காந்துருக்கியே'ன்னு கோவமா பேசிட்டேன்.
அப்போதான் சொல்றான், படத்துல அஜித் சார் கைல ஒரு குச்சிய வச்சு பல் குத்திக்கிட்டே இருப்பார், அது எப்படி உங்களுக்கு தெரிஞ்சுதுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்னு சொன்னான். நான் யாதர்த்தமா எழுதினேன்" என்று ஏ. ஆர். முருகதாஸுடன் ஏற்பட்ட முதல் அனுபவத்தை பகிர்ந்தார்.