Sangeetha Sajith Demise: ஜெயலலிதா கையில் 10 பவுன் சங்கிலி வாங்கியவர்.. மறைந்த சங்கீதா சஜித் பற்றி தெரியுமா?
தமிழில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் சங்கீதா சஜித் பாடிய ‘தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை...’. மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தந்தது.
பிரபல பின்னணிப் பாடகி சங்கீதா சஜித் தனது 46வது வயதில் உடல்நிலை கோளாறு காரணமாக உயிரிழந்தார்.
பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி சங்கீதா சஜித் திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார். சங்கீதா சில காலமாக சிறுநீரகம் தொடர்பான நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது சகோதரி வீட்டில் காலமானார்.
#SangeethaSajith (46) noted playback singer in Malayalam, Tamil & Telugu passes away due to kidney related ailments .#RIPSangeethaSajith pic.twitter.com/GR9rJXFQo3
— UnniKrishnan R Santosh (@realunnikrish) May 22, 2022
பிரபல பின்னணி பாடகியான இவர் மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தீவிரமாக இருந்தார். தென்னிந்திய மொழிகளில் 200 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
தமிழில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் அவர் பாடிய ‘தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை...’. மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தந்தது. பிருத்விராஜ் நடித்த 'குருதி' படத்தின் தீம் பாடல் மலையாளத் திரைப்படத்தில் அவரது கடைசிப் பாடலாகும்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கையில் பரிசு :
மறைந்த பின்னணிப் பாடகி சங்கீதா சஜித் தான் 15 வயதாக இருக்கும்போது தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்ட விருது வழங்கும் நிகழ்ச்சி முடிந்தவுடன் இசையமைப்பாளர் தேவா ஒரு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். மேலும், சங்கீதாவின் குரல் சுந்தராம்பாளின் குரல் போலவே இருந்ததால் கே.பி.சுந்தராம்பாளின் கீர்த்தனையான ‘ஞான பழத்தை பிழிந்து’ பாடலைப் பாடச் சொன்னார்.
பாடகி சங்கீதா சஜித் அந்த பாடலை பாடி முடித்ததும் அங்கிருந்த ரசிகர்கள் கைதட்டலால் அரங்கத்தை அதிர செய்தனர். மேலும், இவரின் குரலில் மயங்கிய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக தனது தலைமைச் செயலாளரின் காதுகளில் ஏதோ கிசுகிசுத்தார். அதன்பிறகு வெளியே சென்ற அந்த நபர் நீண்ட நேரத்திற்கு பிறகு கையில் ஏதோ கொண்டு வந்து முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா மேடைக்குச் சென்று 10 நவன் தங்கத்தைப் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்