ஐரோப்பாவை பைக்கில் வலம் வரும் நடிகர் அஜித்... வைரலாகும் புகைப்படங்கள்...!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அவர் முழுவீச்சில் படங்களில் நடிக்க தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
ஐரோப்பாவில் நடிகர் அஜித் பயணம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
`நேர்கொண்ட பார்வை’, `வலிமை’ ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு மீண்டும் மூன்றாவது முறையாக நடிகர் அஜித் குமார், இயக்குநர் ஹெச்.வினோத் ஆகியோர் இணைந்துள்ளனர். இதற்கிடையில் லைகா நிறுவன தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அவர் முழுவீச்சில் படங்களில் நடிக்க தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
View this post on Instagram
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான `வலிமை’ திரைப்படம் அதன் ஆக்ஷன் காட்சிகளுக்காக பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும், பெரிதும் வெற்றியைப் பெறவில்லை. அதன் கதை, திரைக்கதை ஆகியவற்றிற்காக அந்த படம் பெரிதும் விமர்சனம் செய்யப்பட்டது.
தொடர்ந்து வலிமை திரைப்படம் Zee 5 இல் OTT தளத்தில் படம் வெளியானது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச். வினோத்துடன் இணைந்துள்ளார்.'ஏகே 61' ஒரு வங்கிக் கொள்ளை திரைப்படம் என்றும், இதில் அஜித் குமார் எதிர்மறையான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் அஜித் குமார் தனது பிஎம்டபிள்யூ பைக்கில் பயணம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அவரின் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்