மேலும் அறிய

Pathan Issue: நாடாளுமன்றத்தில் வெடித்த பதான் சர்ச்சை..‘இஸ்லாமிய மதம் பலவீனமானதல்ல’.. பதிலடி கொடுத்த எம்.பி!

Pathan Issue: ஷாருக்கான் நடிப்பில் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள பதான் படத்தின் சர்ச்சை, நாடாளுமன்றத்தில் பேசுபொருளாக மாறும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவராக உலா வரும் ஷாருக்கான், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஹீரோவாக நடித்துள்ள படம் பதான். இப்படத்தில், ஷாருக்கிற்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். பதானின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலில் தீபிகா படுகோனே அணிந்திருந்த உடை குறித்தும் அந்த உடையின் நிறம் குறித்தும் புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியது. 

பதான் சர்ச்சை!

இந்தி திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம் ஆகியோரின் நடிப்பில், சுமார் 250 கோடி ரூபாய் அளவில் உருவாக்கப்பட்டுள்ள படம், பதான். ஷாருக்கானின் பிறந்தநாளையொட்டி வெளியான இப்படத்தின் டீசர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து, இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான பேஷ்ரம் ரங் பாடல், சமீபத்தில் வெளியானது.

இப்பாடலில் நாயகி தீபிகா படுகோன், காவி நிற கவர்ச்சி உடையணிந்து ஷாருக்கானுடன் நடனமாடுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதற்கு மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா மற்றும் சபாநாயகர் ஆகியோர் எதிர்த்து கண்டனம் தெரிவித்தனர்.  “அந்த காவி உடையை நீக்கவில்லை என்றால், பதான் படத்திற்கு மத்திய பிரதேசத்தில் தடை விதிக்கப்படும்” என்றும் அவர்கள் போர் கொடி தூக்கினர். 


Pathan Issue: நாடாளுமன்றத்தில் வெடித்த பதான் சர்ச்சை..‘இஸ்லாமிய மதம் பலவீனமானதல்ல’.. பதிலடி கொடுத்த எம்.பி!

நாடாளுமன்றத்தில் பதான் குறித்து பேச்சு:

பதான் படத்தின் பஞ்சாயத்து, பல நாட்களாகவே ஓயாமல் நடைப்பெற்று வரும் நிலையில், இது குறித்து படக்குழுவினர் யாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இந்த பிரச்சினை குறித்து, நேற்று (திங்கட்கிழமை) நடைப்பெற்ற நாடாளுமன்ற மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி குன்வர் டேனிஷ் அலி பேசினார். 

அப்போது அவர், “இந்துக்களின் உணர்வுகளை புண் படுத்துவதாக்கூறி, பதான் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று, பாஜக உறுப்பினர் பலர் அதிகாரிகள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், பதான் படத்தின் பிரச்சனை ஒரு புதிய வழக்காகவே மாறி விட்டது” என்று கூறினார். 

“இஸ்லாமியர்கள் பலவீனமானவர்கள் அல்ல..”

பதான் பட பிரச்சினை குறித்து தொடர்ந்து பேசிய அவர், “சினிமாவிற்கு ஒப்புதல் அளிப்பதையோ, தடை விதிப்பதையோ தணிக்கை குழுவிடம் விட்டுவிட வேண்டும். யாரோ காவி உடை அணிவதால் ஆபத்துக்கு உள்ளாவதற்கு சனாதன தர்மம் பலவீனமானது அல்ல, அது போல் இஸ்லாமிய மதமும் பலவீனமானது அல்ல” என்றார். 

மத்திய பிரதேசத்தில் பதான் படம் வெளியாகுமா?

கடந்த 2 வாரங்களாக தொடரும் பதான் பிரச்சினையால், இப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என்ற கேள்வி, பலரது மனங்களிலும் எழுந்தது. குறிப்பாக மத்திய பிரதேசத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள், இப்படத்தினை ஒழுங்காக திரையரங்குகளில் திரையிட விடுவார்களா என்றும், மக்கள் பலர் சந்தேகித்து வந்தனர். நாடாமன்ற மக்களவையில், பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி குன்வர் டேனிஷ் அலியின் நேற்றைய பேச்சு, அனைவரது சந்தேகங்களுக்கும் பதிலாக அமைந்துள்ளது. இருந்தாலும், படம் வெளியாகும் போதுதான் முழுகதை தெரியும் என ஷாருக் ரசிகர்கள் பலர் சமூக வலைதளம் முழுவதும் தங்களது கருத்துகளை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Embed widget