DUNKI : வரப்போகுது டங்கி... அடுத்த ப்ளாபஸ்டருக்கு தயாராகிய ஷாருக்கான்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!
பதான், ஜவான் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்தப் படத்திற்கான ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார் நடிகர் ஷாருக்கான்.
ஜவான் திரைப்படத்தின் வெற்றி விழாவில் தனது அடுத்த படத்திற்கான ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார் நடிகர் ஷாருக் கான். ஒரே ஆண்டில் மூன்று திரைப்படங்களை வெளியீட்டு ஹாட்ரிக் ப்ளாக் பஸ்டர்களை பதிவு செய்வாரா ஷாருக்கான்.
ஜவான்
BREAKING: Shah Rukh Khan confirms #Dunki for 22nd December 2023 at Jawan event.
— Manobala Vijayabalan (@ManobalaV) September 15, 2023
Third ₹1000 cr club movie is on cards for Baadshah. pic.twitter.com/Icre7662GR
அட்லீ இயக்கியிருக்கும் ஜவான் திரைப்படம் பாலிவுட்டில் வசூல் சாதனை படைத்து வருகிறது. ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, சஞ்சய் தத், தீபிகா படூகோன், பிரியாமணி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஷாருக் கானின் மனைவி கெளரி கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று செப்டம்பர் 15 ஆம் தேதி ஜவான் படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. இந்நிகழ்சியில் ஹாருக் கான், அட்லீ, விஜய் சேதுபதி, தீபிகா கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்சியில் ஷாருக் கான் தனது அடுத்தப் படமாக டங்கி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார்.
டங்கி
Hatrick for SRK this Year… #Dunki coming this Christmas. pic.twitter.com/NSBUhZoTZh
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 16, 2023
3 இடியட்ஸ் பி.கே உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றிப் படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக் கான் நடித்திருக்கும் திரைப்படம் டங்கி. ஷாருக் கான், விக்கி கெளஷல்,டாப்ஸி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படத்தை ஷாருக் கானின் மனைவியின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீ நிறுவனம் தயாரித்துள்ளது. ஜவான் திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய ஷாருக் கான் வருகின்ற டிசம்பர் 22 ஆம் தேதி டங்கி திரைப்படம் வெளியாகும் என தெரிவித்தார். இதனால் இந்தி சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். ஒரே ஆண்டில் தனது மூன்றாவது படங்களை வெளியிட இருக்கிறார் ஷாருக் கான்.
வசூல் ஹாட்ரிக்
இந்த ஆண்டின் தொடக்கத்தை ஷாருக் கான் நடித்து வெளியான பதான் திரைப்படம் இந்தி சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சாதனைப் படைத்துள்ளது. பதான் திரைப்படம் உலகளவில் ரூ 1050 கோடிகளை வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ஜவான் திரைப்படம் வெளியாகிய ஒரே வாரத்தில் 700 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது. இன்னும் சில நாட்களில் பதான் திரைப்படத்தின் வசூலை ஜவான் முறியடிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து வரும் நிலையில் தற்போது தனது மூன்றாவது படத்தின் அறிவிப்பை ஷாருக் கான் வெளியிட்டுள்ளார். மிகப்பெரிய வசூல் ஈட்டும் படங்களுக்கு பெயர் போனவர் ராஜ்குமார் ஹிரானி. அதே நேரத்தில் வசூல் அரசனாக திகழும் ஷாருக் கானுடன் இணைந்து உருவாகி இருக்கும் டங்கி திரைப்படமும் 1000 கோடிகளை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது.