முதன்முறையாக குழந்தையின் படம் பகிர்ந்து அறிமுகப்படுத்திய சுதாகர்.. அடுத்தென்ன அப்பா பரிதாபங்களா?
குட்டி சுதாகர் சுட்டித்தனம் பண்ண ரெடி! பரிதாபங்கள் சுதாகர் தன் குழந்தையின் படம் பகிர்ந்து அறிமுகப்படுத்தியுள்ளார். அடுத்தென்ன அப்பா பரிதாபங்களா?
![முதன்முறையாக குழந்தையின் படம் பகிர்ந்து அறிமுகப்படுத்திய சுதாகர்.. அடுத்தென்ன அப்பா பரிதாபங்களா? Parithapangal YouTube channel fame Parithapangal Sudhakar blessed baby introduced முதன்முறையாக குழந்தையின் படம் பகிர்ந்து அறிமுகப்படுத்திய சுதாகர்.. அடுத்தென்ன அப்பா பரிதாபங்களா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/af243ae10c6c195264bbcc37d76f19111694102142599571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பரிதாபங்கள் யூடியூப் மூலம் பல்வேறு தரப்பு மக்களின் மனதை கவர்ந்த பரிதாபங்கள் சுதாகருக்கு ஏற்கனவே குழந்தை பிறந்தநிலையில் இன்று தனது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் அறிமுகம் செய்தார்.
கடந்த 2022 மார்ச் மாதம் பரிதாபங்கள் சுதாகருக்கு திருமணம் ஆன நிலையில், அவரது குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட பதிவில், “Sudhakar Bro ❤️என்று பதிவிட்டு சுதாகர் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருந்தது.
கடந்த 2021 டிசம்பர் மாதம் சுதாகரின் சொந்த ஊரான சிவகாசியில் பரிதாபங்கள் சுதாகருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவரும் திருமணம் நடந்துமுடிந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் அப்பவே சமூகவலைதளங்களில் வைரலாகி வந்தது.
சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்ற பெரும் கனவோடு வந்த கோபியும் சுதாகரும் ஆரம்பத்தில் பல்வேறு தொலைக்காட்சிகளில் காமெடியர்களாக வர முயற்சி செய்தனர். ஆனால், தனியார் சேனல் இவர்களுக்கு எந்தவொரு வாய்ப்பும் வழங்கவில்லை. இதன் காரணமாக, பல்வேறு யூடியூப் சேனல்களில் வீடியோவாக பதிவிட்டு, இறுதியாக பரிதாபங்கள் சேனல் ஆரம்பித்தனர்.
View this post on Instagram
இந்த பயணம் இவர்களை சினிமா வரை கொண்டு சென்று விட்டது. தற்போது, இவர்கள் இருவரும் சொந்தமாக திரைப்படம் எடுக்கும் அளவிற்கு வளர்ந்து, விரைவில் அந்த திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)