மேலும் அறிய

Parithabangal: ‘கமலுக்கு வந்த சோதனை’ .. பிக்பாஸ் நிகழ்ச்சியை கழுவி ஊற்றிய பரிதாபங்கள் டீம்..

பிரபல யூட்யூப் சேனலான பரிதாபங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்து இந்த வாரம் வீடியோ வெளியிட்டுள்ளது இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது. 

பிரபல யூட்யூப் சேனலான பரிதாபங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்து இந்த வாரம் வீடியோ வெளியிட்டுள்ளது இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜோவிகா விஜயகுமார், வினுஷா தேவி, விஜய் வர்மா, விசித்ரா, யுகேந்திரன் வாசுதேவன், சரவண விக்ரம், ரவீனா தாஹா, மணி சந்திரா, நிக்ஸன், ஐஷூ, அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, மாயா கிருஷ்ணன், அக்‌ஷயா உதயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய், கூல் சுரேஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். 

தொடர்ந்து ஒரே மாதத்தில் தினேஷ், அன்னலட்சுமி, விஜே அர்ச்சனா, கானா பாலா, ஆர்.ஜே.பிராவோ ஆகிய 5 பேர் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக உள்ளே நுழைந்தனர். இப்படியான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை வினுஷா தேவி, விஜய் வர்மா, அன்னலட்சுமி, கானா பாலா, ஆர்.ஜே.பிராவோ, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, ஐஷூ, அனன்யா ராவ் ஆகிய 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்று (நவம்பர் 26) ஒளிபரப்பாகும் எபிசோடில் அக்‌ஷயா வெளியேற்றப்பட உள்ளார். 

இப்படியான நிலையில் பிரபல யூட்யூப் சேனலான பரிதாபங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்து இந்த வாரம் வீடியோ வெளியிட்டுள்ளது. இதில் கமல்ஹாசன், வீட்டின் போட்டியாளர்கள் சகட்டுமேனிக்கு கிண்டல் செய்யப்பட்டுள்ளனர். ”பை-பாஸ் பாவங்கள்” என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த எபிசோடில், ‘கமல்ஹாசன் பேசுவது போல கோபி பேசி காட்டியுள்ளார். மேலும் கோவிகாவை (ஜோவிகா) பற்றி பேசினால் உங்கள் அம்மா திட்டுவார் என தான் பயப்படுகிறேன். மக்களும் அதுக்குதான் பயப்படுகிறார்கள்.

கவினா (ரவீனா), சனி (மணி சந்திரா), கோவிகா (ஜோவிகா, சரவண கிக்ரம் (சரவண விக்ரம்), பிரச்சனா (அர்ச்சனா), ஆயா (மாயா), அசித்ரா (விசித்ரா) என பிக்பாஸ் போட்டியாளர்களை சரமாரியாக விமர்சித்துள்ளனர். மேலும் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட கமலின் இரட்டை நிலையையும் கிண்டல் செய்துள்ளனர். அதேபோல் தன் மேல் இருக்கும் தப்பை ஒப்புக் கொள்ளாமல் இருக்கும் விசித்ரா பற்றியும் காட்சிகளை வைத்துள்ளனர். ஐஷூ விவகாரத்தில் நிக்ஸன் நடந்து கொண்டது, மாயா கேங் அர்ச்சனாவுக்குன் எதிராக நடத்திய தாக்குதலையும் கிண்டல் செய்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
அமைச்சரவை மாற்றத்திற்கு தயாராகும் CM விஜய் - லிஸ்டில் 7 பேரா? என்ன காரணம், யாருக்கு ஜாக்பாட்?
TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
த.வெ.க-வில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்; அதிர்ச்சியில் அதிமுக!
த.வெ.க-வில் இணையும் 4 முன்னாள் அமைச்சர்கள், 7 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்; அதிர்ச்சியில் அதிமுக!
TN Govt: தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
288 கி.மீட்டர் மைலேஜ் மாமே! Vespa 125 ஸ்கூட்டர் எதுக்கு வாங்கனும்? இவ்ளோ வசதி இருக்கா
288 கி.மீட்டர் மைலேஜ் மாமே! Vespa 125 ஸ்கூட்டர் எதுக்கு வாங்கனும்? இவ்ளோ வசதி இருக்கா
June 26 Car Sale: ஒரு வழியா..! டாடாவின் கம்பேக், மஹிந்த்ரா ஷாக், ஹுண்டாய்க்கு என்ன தான் ஆச்சு? மாருதி காட்டில் மழை
ஒரு வழியா..! டாடாவின் கம்பேக், மஹிந்த்ரா ஷாக், ஹுண்டாய்க்கு என்ன தான் ஆச்சு? மாருதி காட்டில் மழை
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
Embed widget