மேலும் அறிய

Paridhabangal Gopi Sudhakar | பண மோசடியில் ஈடுபட்டார்களா கோபி-சுதாகர்? - அவர்கள் கொடுத்த விளக்கமும்! பின்னணியும்!

பாலு போஸ் நிறைய மோசடி குறித்த வீடியோக்களை பரிதாபங்கள் சேனலில் செய்திருந்தார். அந்த வீடியோக்கள் மட்டும் தற்போது சேனலில் இருந்து அழிக்கப்பட்டிருப்பது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

அரசியல் நையாண்டி, நாட்டு நடப்புகளோடு ஒன்றிய நகைச்சுவை என யூடியூப் பக்கத்தை கலக்கி வருபவர்கள் கோபி மற்றும் சுதாகர் இணை. ஆரம்ப காலக்கட்டத்தில் பிரபல தொலைக்காட்சியால் புறக்கணிக்கப்பட்ட இவர்கள் , மெட்ராஸ் செண்ட்ரல் என்னும் சேனலில் இணைந்து வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். அங்குதான் இவருக்கான தனி ரசிகர் பட்டாளம் குவிய தொடங்கியது. அதன் பிறகு அந்த சேனல் நிர்வாகத்திற்கும் இவர்களுக்கும் இடையே ஏதோ சலசலப்பு ஏற்படவே அதனை விட்டு வெளியேறி , பரிதாபங்கள் என்ற தனி யூடியூப் சேனலை தொடங்கினார்கள். அதுவும் அவர்கள் எதிர்பார்த்த மாதிரி க்ளிக் அடித்தது. சமூக வலைத்தளங்களில் பிரபலங்களாக இருப்பவர்களின் இலக்கு என்னவோ வெள்ளித்திரையை நோக்கியதாகத்தான் இருக்கும். அதற்கு கோபி மற்றும் சுதாகர் தேர்வு செய்த பாதை கிரவுட் ஃபண்டிங்.

Paridhabangal Gopi Sudhakar | பண மோசடியில் ஈடுபட்டார்களா கோபி-சுதாகர்? - அவர்கள் கொடுத்த விளக்கமும்! பின்னணியும்!
அதாவது மக்களிடம் இருந்து பணம் வசூலித்து அந்த பணத்தைக்கொண்டு படம் எடுக்கும் முறை . முன்னதாக இது போன்ற கிரவுட்ஃபண்டிங் முறையில் நிறைய பேர் படம் எடுத்திருந்தாலும், இந்தியாவிலேயே அதிக அளவில் கிரவுட் ஃபண்டிங் கிடைத்தது கோபி மற்றும் சுதாகருக்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட  6 கோடிக்கும் மேலாக நிதி திரட்டப்பட்டதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக ஒரு வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தனர். பின்னர் திரை பிரபலங்களை அழைத்து தங்கள் படத்தின் டைட்டில் வெளியீட்டை கிராண்டாக செய்திருந்தனர். படத்திற்கு  ”மணி கம் டுடே , கோ டுமாரோ “ என பெயரிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ‘சூப்பர் பேக்கர்’ என்ற செயலி பண மோசடியில் ஈடுபட்டதாக அம்பலமான நிலையில், அந்த செயலி குறித்து விளம்பரம் ஒன்றை தங்கள் யுடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர் கோபி , சுதாகர். அதன் பிறகு பரிதாபங்கள் கிரவுட் ஃபண்டிங்கிற்கு  நிதி திரட்ட பயன்படுத்திய ஃபன்மெலன் என்ற செயலியும் பண மோசடியில் ஈடுபட்டதாகவும், அவர்களுக்கு கோபி சுதாகர் உடந்தையாக இருந்ததாகவும் நிறைய குற்றச்சாட்டுகள் எழுந்தன. காரணம் டைட்டில் வெளியீட்டிற்கு பிறகு படம் குறித்த எந்தவொரு அப்டேட்டையும் அவர்கள் வெளியிடவில்லை.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கோபி மற்றும் சுதாகர் நேற்று விளக்க காணொளி ஒன்றை வெளியிட்டனர். அதில்  தங்களிடம் விளம்பரத்திற்காக வந்த ஒரு செயலி மோசடி செய்திருப்பதால் நாங்களும் அவ்வாறு மோசடியில் ஈடுபட்டிருப்போம் என நினைக்க வேண்டாம். படம் குறித்த அறிவிப்பை சப்ஸ்கிரைபர்ஸ்களுக்கு நாங்கள் தெரிவிக்கவில்லை ஆனால் பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்கு அத்தனை விவரங்களையும் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். கொரோனாவின் தாக்கத்தால் சினிமா மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. அதனால்தான் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டை கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் டீஸர் வெளியிடுவோம். அதன் தரத்தை பார்த்து எங்களின் மெனக்கடல்களை புரிந்துக்கொள்வீர்கள் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பரிதாபங்கள் சேனலில் இயக்குநராக, நடிகராக இருந்த பாலு போஸ் என்பவர் , தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார், அதில் “ பரிதாபங்கள் சேனலில் நான் இயக்கிய அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டுவிட்டது. வீடியோ எங்கே என கேட்டு தயவு செய்து வெறி ஏத்த வேண்டாம் , நன்றி வணக்கம்” என தெரிவித்துள்ளார். பாலு போஸ் நிறைய மோசடி குறித்த வீடியோக்களை பரிதாபங்கள் சேனலில் செய்திருந்தார். அந்த வீடியோக்கள் மட்டும் தற்போது சேனலில் இருந்து அழிக்கப்பட்டிருப்பது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
US Venezuela: அமெரிக்காவின் மோசமான சிறையில் மதுரோ..! போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? யாருக்கு யார் ஆதரவு?
Pongal Gift 2026: அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
அடி தூள்.! பொங்கல் பரிசு ரூ. 3000- தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
AVM Saravanan: ஓட்டுக்காக வரவில்லை.. எல்லாம் அன்பு தான்.. முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்!
AVM Saravanan: ஓட்டுக்காக வரவில்லை.. எல்லாம் அன்பு தான்.. முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்!
Honda Discount: புத்தாண்டு தமாகா..! சிட்டி, எலிவேட் கார் மாடல்களுக்கு தள்ளுபடி, அள்ளி வீசிய ஹோண்டா - ரூ.1.71 லட்சம்
Honda Discount: புத்தாண்டு தமாகா..! சிட்டி, எலிவேட் கார் மாடல்களுக்கு தள்ளுபடி, அள்ளி வீசிய ஹோண்டா - ரூ.1.71 லட்சம்
என் நண்பர் மீது கை வைத்துட்டீங்க..சும்மா இருக்க முடியாது.! ஏவுகனைகள் ரெடி- டிரம்ப்பை அலறவிடும் கிம் ஜாங் உன்
என் நண்பர் மீது கை வைத்துட்டீங்க..சும்மா இருக்க முடியாது.! ஏவுகனைகள் ரெடி- டிரம்ப்பை அலறவிடும் கிம் ஜாங் உன்
Embed widget