Pakistan Actress - Chandrayaan: ’இதுக்கு வெட்கப்படணும்.. இன்னும் 20, 30 வருஷங்கள் ஆகலாம்’: சந்திரயான் வெற்றி குறித்து புலம்பிய பாகிஸ்தான் நடிகை..
சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிரங்கிய நிலையில், பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி தன் சொந்த நாட்டை கடுமையாக சாடியுள்ளார்.
சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிரங்கிய நிலையில், பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி தன் சொந்த நாட்டை கடுமையாக சாடியுள்ளார்.
சந்திரயான் 3 விண்கலம்
உலக நாடுகளின் பெரும் ஆச்சரியத்திற்கிடையே இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நேற்று (ஆகஸ்ட் 24) மாலை 6.04 மணியளவில் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து 6 மணி நேரத்திற்குப் பிறகு லேண்டரில் இருந்து ரோவரை தரையிறக்கும் பணி தொடங்கிய நிலையில் இந்த பிரக்யான் ரோவர் சுமார் 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. தனது பணியை ரோவர் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவின் வியத்தகு சாதனையை இந்திய மக்கள் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, இந்திய கொடிகளை கைகளில் ஏந்தி கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேபோல் உலகமெங்கும் இருந்து சந்திரயான் 3 விண்கலம் மூலம் சாதனை படைத்த இந்தியாவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சேஹர் ஷின்வாரி இஸ்ரோவுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
நடிகை சேஹர் ஷின்வாரி பாராட்டு
இதுதொடர்பாக ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ‘இந்தியாவுடனான விரோதத்தை தவிர, சந்திரயான் 3 மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் வரலாறு படைத்த இஸ்ரோவை நான் உண்மையிலேயே வாழ்த்துகிறேன். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இடைவெளி அனைத்து அம்சங்களிலும் எவ்வளவு அளவிற்கு விரிவடைந்துள்ளது என்பதை காணலாம். இந்த சாதனையை செய்ய பாகிஸ்தானுக்கு இன்னும் இரண்டு முதல் மூன்று தசாப்தங்கள் ஆகும். துரதிர்ஷ்டவசமாக, இன்று நம் துயரத்திற்கு நாம் தான் காரணமே தவிர வேறு யாரும் இல்லை. வெட்கத்துல தலைகுனிய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
இப்படி வேற்று நாடாக இருந்தாலும் இந்திய நாட்டின் சாதனையை பாராட்டிய சேஹர் ஷின்வாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதேசமயம் சொந்த நாட்டை விமர்சித்ததாக குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியவர்
முன்னதாக கடந்த மே மாதம் இந்த சேஹர் ஷின்வாரி இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அதற்கு காரணம், ஊழல் வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு நேரில் ஆஜராக வந்தபோது துணை ராணுவப்படையால் கைது செய்யப்பட்டார். இது அந்நாட்டில் போராட்டமாக வெடித்தது.
அப்போது நடிகை சேஹர் ஷின்வாரி தன் ட்விட்டர் பக்கத்தில், ‘யாருக்காவது டெல்லி காவல்துறையின் ஆன்லைன் முகவரி தெரியுமா... எனது நாடான பாகிஸ்தானில் குழப்பத்தையும், தீவிரவாதத்தையும் இந்திய பிரதமர், இந்திய உளவு அமைப்பின் (RAW)பரப்புகிறார்கள். அவர்கள் மீது நான் புகாரளிக்க வேண்டும். சுதந்திரமாக இருக்கும் பட்சத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் எனக்கு நீதி வழங்கும் என்று நான் நம்புகிறேன்" என்று ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.