Pa Ranjith : “பேரக்குழந்தைகளின் விரல்களையும் சேர்த்துக்கொள்வேன்” - காதல் கணவர் பா. ரஞ்சித்திற்கு கவிதை எழுதிய மனைவி!
Pa Ranjith wedding anniversary : பா.ரஞ்சித்தின் பழைய புகைப்படங்களையும், அவருடன் எடுத்துக்கொண்ட படங்களையும் இணைத்து ரீல்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென புது பாணியை உருவாக்கி வெற்றி இயக்குநராக வலம் வருபவர் பா.ரஞ்சித். அவ்வப்போது, சிக்கலுக்குரிய பேச்சால் சர்சைகளிலும் சிக்கி வரும் இவர், கமர்ஷியல் சினிமா என்ற பெயரில் அரைத்த மாவையே அரைக்காமல் தனது ஒவ்வொரு படைப்பிலும், மக்களின் சிந்தனையை தூண்டும் வகையில் சினிமா எடுத்து வருகிறார்.
சினிமா வாழ்க்கையை தாண்டி, அவரது காதலியை நேசித்து கரம்பிடித்துள்ளார். தற்போது, அவர்களின் திருமண நாளையொட்டி அவரின் மனைவி அனிதா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பா.ரஞ்சித்தின் பழைய புகைப்படங்களையும், அவருடன் எடுத்துக்கொண்ட படங்களையும் இணைத்து ரீல்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அத்துடன், ”2002 குளிர்ந்த காலை பொழுது தோழி ஒருவரோடு கதையாடி அமர்ந்திருந்த நேரம் என் பின் நின்று அழைத்தது ஒரு குரல், திரும்பினேன் முகம் முழுக்க சிரிப்புடன் நின்றது அந்த என் உரு,பின் என்னை அழைத்து சென்றது காட்சியக அறைக்குள், திகு திகு என்ற என் உள்ளம் எதையும் காட்ட என் பாவனை, மீண்டும் என்ன சொல்ல போரானோ என்ற குழப்பம் எல்லாம் மிஞ்சி சிரித்து கொண்டு இருந்தது. என் உதடு, பின் கைகளை இருக பிடித்து கூறினான் இவன், நல்லா யோசிச்சிபார்த்தேன் நீ இல்லாம என்னால இருக்க முடியாது நம்ப காதலிக்கலாம் என்று, அன்றுமுதல், நான் ஒவ்வொருவருடங்களாய் விரல் விட்டு எண்ணிகைகளை கூட்டி வருகிறேன், என் விரல்கள் தீர்ந்து விட்டால் நம் குழந்தைகளின் விரல் தேடி கூட்டுவேன். நம் பேரகுழந்தைகளின் விரல்களை சேர்த்தும் கூட்டிகொண்டே போவேன், நம் இந்த காதல் தினத்தை” என அவருக்காக கவிதை ஒன்றையும் எழுதியுள்ளார்.
View this post on Instagram
பா ரஞ்சித்தின் திரைப்பயணம்
அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவரின் முதல் படமே ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படமாக அமைந்தது. தொடர்ந்து பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை போன்ற பல அற்புதமான திரைப்படங்கள் வெளியானது. சமீபத்தில் இவரின் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பா. ரஞ்சித் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில், 'தங்கலான்' படம் உருவாகி வருகிறது. 18 ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகிய பின், அவர் பிறந்தநாள் அன்று மற்றொரு புது போஸ்டர் ஒன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.