மேலும் அறிய

Pa.Ranjith | ‛நானே ஒரு அட்டக்கத்திதான்...’ - பிளாஷ்பேக் சொன்ன இயக்குநர் பா.ரஞ்சித்!

"நானும் அட்டக்கத்தியாகத்தான் இருந்தேன் “ என்கிறார் ரஞ்சித்.

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்களுள் ஒருவர் பா.ரஞ்சித். உதவி இயக்குநராக இருந்து , இயக்குநர் வெங்கட் பிரபு குழுவினருடன் இணைந்து சென்னை 28 திரைப்படத்தில் ஸ்டோரி போர்ட் உறுப்பினராக பணியாற்றினார். அதன் பிறகு கார்த்தி நடிப்பில் உருவான மெட்ராஸ் திரைப்படத்திற்கே வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 படம்தான் முக்கியமான காரணமாம். எப்போது படிக்காத , ஊதாரியாக சுற்றும் இளைஞர்களின் வாழ்வியலே வட சென்னை இளைஞர்களாக காட்டி வரும் சூழலில் அங்கும் படித்த இளைஞர்கள்தான் அதிகம் இருக்கின்றனர் என்பதை காட்டும் விதத்தில் தான் மெட்ராஸ் படத்தை கையில் எடுத்ததாக கூறும் பா.ரஞ்சித் தனது முதல் படமான அட்டக்கத்தில் திரைப்படத்தின் கதை உருவான சுவாரஸ்யம் குறித்து பகிர்ந்துள்ளார்.


பா.ரஞ்சித் கல்லூரியில் படிக்கும் சமயங்களில் அவருக்கு ஒரு நண்பர் இருந்தாராம். அவர் எப்போதுமே ஏதாவது ஒரு பெண் பின்னால் சுற்றிக்கொண்டிருப்பாராம். அந்த பெண் காதலிக்க மறுத்துவிட்டால் , பா.ரஞ்சித்திடமே வந்து “ அவ சரியான மொக்க ஃபிகர் மச்சி “என கூறுவாராம் . மேலும் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் சமயங்களில் ஏதேனும் பெண்ணை கண்டால் , அப்படியே அந்த பெண் பின்னால் சென்று விடுவாராம். அப்படியான தருணங்களில் ரஞ்சித் பயன்படுத்திய வார்த்தைதான் அட்டக்கத்தியாம். சரி இதனை கதைக்களமாக கொண்டு ,இப்படியாக வேறு யாராவது இருக்கிறார்களா என களத்தில் இறங்கிய பா.ரஞ்சித்திற்கு பிறகுதான் தெரிந்திருக்கிறது.

எல்லா இளைஞர்களுமே அட்டக்கத்தியாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்று.” நானும் அட்டக்கத்தியாகத்தான் இருந்தேன் “ என்கிறார் ரஞ்சித். இப்படியான இளைஞர்கள் காதலை கொண்டாட்டமாக பார்க்கிறார்கள் என்னும் ரஞ்சித் , அந்த பெண்ணுக்காக அவன்  நடை, உடை என தன்னை மேம்படுத்த தொடங்குவதில்தான் இந்த கொண்டாட்டம் துவங்குகிறது என்கிறார். இதை எல்லாம் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அட்டக்கத்தி படத்தை எடுத்தாராம் ரஞ்சித். 


Pa.Ranjith | ‛நானே ஒரு அட்டக்கத்திதான்...’ - பிளாஷ்பேக் சொன்ன இயக்குநர் பா.ரஞ்சித்!

அட்டக்கத்தி படத்தை பொருத்தவரையில் நான் இயக்குநர் இல்லை. தொகுப்பாளன் என சொல்லிக்கொள்ளவே விரும்புகிறேன் என்கிறார் ரஞ்சித்.  ரஞ்சித் மெட்ராஸ் திரைப்படத்திற்கு பிறகு எடுத்த படங்கள் அனைத்துமே சமுதாய சிந்தனை கொண்ட கருத்துகள் அடங்கிய படமாக பார்க்கப்படுகிறது. இதனை சிலர் அடையாள அரசியல் என்றும் விமர்சித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க எப்போதான் மீண்டும் காதல் சப்ஜெக்டை கையில் எடுக்க போகிறார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு , கடந்த ஆண்டு இறுதியில் சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்தார் ரஞ்சித். நட்சத்திரம் நகர்கிறது என பெயர் வைக்கப்பட்ட அந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையாம் . ஆணுக்கும் பெண்ணுக்கும் வரும் காதலை தாண்டி , பல்வேறு கோணங்களில் அப்படம் காதலை உயர்த்தி பிடிக்கும் என்கிறார் ரஞ்சித்.

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Embed widget