மேலும் அறிய
Advertisement
Sarpatta Movie Trailer: பாக்ஸிங் என்ன அப்பன் வீட்டு சொத்தா?... தெறிக்கவிடும் சார்பட்டா ட்ரைலர்!
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் வரும் ஜூலை 22ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது.
பாக்ஸிங் மேடையின் பின்னணியில் மெட்ராஸ் பாக்ஸிங் பரம்பரைகளில் சரிக்கு சமமான சார்பட்டா- இடியாப்ப பரம்பரைகளுக்கு இடையே மோசமான ஆங்கில குத்துச்சண்டை போட்டி ஆரம்பமாகிறது என்ற பிண்ணனி குரலுடன் தொடங்கும் படத்தின் ட்ரைலரில் கட்டுமஸ்தான தேகத்துடன் குத்துச்சண்டை வீரராக வரும் ஆரியாவும், கம்பீர நடையும் வெள்ளை உடையுமாக திமுகவின் துண்டுடன் வரும் நடிகர் பசுபதியும், இயக்குநர் பா.ரஞ்சித்தின் அரசியல் பேசும் கதாபாத்திரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hats off @beemji @arya_offl and the entire cast and crew for creating this epic film #SarpattaParambaraiOnPrime
— Suriya Sivakumar (@Suriya_offl) July 13, 2021
The hard work put in by the team is evident onscreen!! 👏🏼👏🏼https://t.co/tNH184r00w@PrimeVideoIN @officialneelam @K9Studioz @joinmaajja @Music_Santhosh
தினேஷ் நடிப்பில் அட்டக்கத்தி, கார்த்தி நடிப்பில் மெட்ராஸ், ரஜினி காந்த் நடிப்பில் கபாலி, காலா, ஆகிய படங்களை இயக்கிய பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ஐந்தாவது திரைப் படமாக சார்பாட்டா உள்ள நிலையில் பட ட்ரைலரை பார்த்த பல்வேறு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் படத்தின் மீதான தங்களின் எதிர்ப்பார்ப்பையும் கருத்துகளையும் சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர். இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய படங்கள் அனைத்தும் அரசியல் பின்னணி கொட திரைக்களங்களை கொண்டதாகவே இருந்து வந்துள்ள நிலையில் சார்பாட்டாவும் அரசியல் பேசும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திருச்சி
தேர்தல் 2024
பொழுதுபோக்கு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion