மேலும் அறிய

Oscars 2023 LIVE: ஆஸ்கர் விருது வென்றது புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது - கீரவாணி பெருமிதம்

Oscar Awards 2023 LIVE Updates: அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் நிகழ்வுகள் குறித்த தகவல்களை நாம் இங்கு காணலாம்.

LIVE

Key Events
Oscars 2023 LIVE:  ஆஸ்கர் விருது வென்றது புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது - கீரவாணி பெருமிதம்

Background

95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து நாட்டு நாட்டு பாடல் (RRR) முதல் ஆவண குறும்படம் - த எலெஃபேண்ட் விஸ்பரர்ஸ் (The Elephant Whisperers), ஆவணப் படமான ஆல் தட் ப்ரீத்ஸ் (All That Breathes) என மூன்று பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள், இவற்றில் எந்தெந்த படங்கள் விருதை வெல்லும் என்பது குறித்தும் பல்வேறு கணிப்புகளை பல ஊடங்கங்களும் வெளியிட்டு வருகின்றன.  அவற்றைப் பார்க்கலாம்:

சிறந்த படம் (லைவ் ஆக்‌ஷன்)

An Irish Goodbye, Ivalu, Le Pupille, Night Ride, The Red Suitcase ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏன் ஐரிஷ் குட்பை (An Irish Goodbye) விருது வெல்லும் என பலரும் ஆருடம் தெரிவித்து வருகின்றனர். அயர்லாந்து நாட்டு படமான இந்தப் படம் விருது வென்று அந்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த வெளிநாட்டுப் படம்

All Quiet on the Western Front, Argentina, 1985, Close, EO, The Quiet Girl இந்த 5 படங்களில்  All Quiet on the Western Front விருது வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷூவல் எஃபெக்ட்

All Quiet on the Western Front, Avatar: The Way of Water, The Batman, Black Panther: Wakanda Forever, Top Gun: Maverick இந்தப் படங்களில், சாந்தேகமேயில்லாமல் அவதார் த வே ஆஃப் வாட்டர் தான் இந்த விருதைத் தட்டித் தூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த ஆவணப் படம் (Documentary Feature Film)

All That Breathes, All the Beauty and the Bloodshed, Fire of Love, A House Made of Splinters, Navalny இந்த 5 படங்களில் இந்தியா சார்பில் ஆல் தட் ப்ரீத்ஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது சிறப்பான விஷயம்.

ஆனால் ரஷ்யா - உக்ரைன் போரில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அமைத்து தரப்படும் தற்காலிக வீடுகளைப் பற்றி எடுக்கப்பட்டுள்ள  ‘எ ஹவுஸ் மேட் ஆஃப் ஸ்ப்ளிண்டர்ஸ்’ படம் தான் விருது வெல்லும் என ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறந்த அனிமேஷன் படம்:

Guillermo del Toro’s Pinocchio, Marcel the Shell With Shoes On, Puss in Boots: The Last Wish, The Sea Beast, Turning Red இந்த 5 படங்களில் நெட்ஃப்ளிக்ஸ் தயாரித்துள்ள Guillermo del Toro’s Pinocchio ஸ்டாப் மோஷன் டெக்னாலஜியில் தயாரிப்பட்டுள்ளதுடன் விருது பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த குறும்படம் - அனிமேஷன்

The Flying Sailor, Ice Merchants, My Year of Dicks, An Ostrich Told Me the World Is Fake and I Think I Believe It ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 

இவற்றில் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகர கதையான மய் இயர் ஆஃப் டிக்ஸ் படம் விருது வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடிட்டிங் (படத்தொகுப்பு)

The Banshees of Inisherin, Elvis, Everything Everywhere All at Once. TÁR, Top Gun: Maverick இந்தப் படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றில் எவ்ரி திங் எவ்ரி வேட் ஆல் அட் ஒன்ஸ் படத்துக்காக பால் ரோஜர் விருதை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவுண்ட் - சிறந்த ஒலியமைப்பு

All Quiet on the Western Front, Avatar: The Way of Water, The Batman, Elvis, Top Gun: Maverick இந்த ஐந்து படங்களில் ஏற்கெனவே ஒலி அமைப்புக்காக டாப் கன் மேவரிக் படம் சில விருதுகளை வென்றுள்ளது. அந்த வரிசையில் ஆஸ்கரையும் தட்டித்தூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த இசை (ஒரிஜினல் ஸ்கோர்)

All Quiet on the Western Front - Volker Bertelmann,
Babylon - Justin Hurwitz,
The Banshees of Inisherin - Carter Burwell, 
Everything Everywhere All at Once - Son Lux,
The Fabelmans - John Williams.

இவற்றில் பாபிலோன் படம் அதன் இசைக்காக ஏற்கெனவே பாராட்டுகளை அள்ளி வரும் நிலையில் இந்த விருதினை இந்தப் படமே பெறும் எனத் தெரிவிக்கிறார்கள்.

சிறந்த ஒளிப்பதிவு

All Quiet on the Western Front, BARDO, False Chronicle of a Handful of Truths, Elvis, Empire of Light, TÁR ஆகிய 5 படங்களில் டார் படத்துக்காக ஃப்ளோரியன் ஹோஃப்மெய்ஸ்டர் (Florian Hoffmeister) விருது வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரைட்டிங் (தழுவப்பட்ட திரைக்கதை)

All Quiet on the Western Front - Screenplay - Edward Berger, Lesley Paterson & Ian Stokell

Glass Onion: A Knives Out Mystery - Written by Rian Johnson

Living - Written by Kazuo Ishiguro

Top Gun: Maverick - Screenplay by Ehren Kruger and Eric Warren Singer and Christopher McQuarrie; Story by Peter Craig and Justin Marks

Women Talking - Screenplay by Sarah Polley

இவற்றில் விமன் டாக்கிங் படத்துக்காக சாரா போலே விருது வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரைட்டிங் (ஒரிஜினல்)

The Banshees of Inisherin - Written by Martin McDonagh

Everything Everywhere All at Once - Written by Daniel Kwan & Daniel Scheinert

The Fabelmans - Written by Steven Spielberg & Tony Kushner

TÁR - Written by Todd Field

Triangle of Sadness - Written by Ruben Östlund

இவற்றில் த பன்ஷீஸ் ஆஃப் இன்ஷெரின் படத்துக்காக டேனியல்ஸ் விருது வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேக் அப் மற்றும் சிகை அலங்காரம்

All Quiet on the Western Front, The Batman, Black Panther: Wakanda Forever, Elvis, The Whale ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் த பேட்மேன் படம் விருது வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஸ்ட்யூம் டிசைன்

Babylon, Black Panther: Wakanda Forever, Elvis, Everything Everywhere All at Once, Mrs. Harris Goes to Paris ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எல்விஸ் படத்துக்காக கேத்ரின் மார்ட்டின் விருது வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ரொடக்‌ஷன் டிசைன்:

All Quiet on the Western Front, Avatar: The Way of Water, Babylon, Elvis, The Fabelmans ஆகிய 5 படங்களில் பாபிலோன் படம் இந்த  விருதை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாக்குமெண்டரி குறும்படம் 

The Elephant Whisperers, Haulout, How Do You Measure a Year?, The Martha Mitchell Effect, Stranger at the Gate இந்த 5 படங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதில் The Elephant Whisperers அல்லது Stranger at the Gate  படம் வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட The Elephant Whisperers படத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 

சிறந்த படம் 

இந்த பிரிவில் All Quiet on the Western Front, Avatar: The Way of Water, The Banshees of Inisherin, Elvis, Everything Everywhere All at Once, The Fabelmans,Tár,Top Gun: Maverick, Triangle of Sadness Women Talking ஆகிய படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் “Everything Everywhere All at Once” படம் நிச்சயம் விருது பெறும் என சொல்லப்படுகிறது. 

சிறந்த இயக்குநர் 

சிறந்த இயக்குநருக்கான பிரிவில் Martin McDonagh (The Banshees of Inisherin),Daniel Kwan and Daniel Scheinert (Everything Everywhere All at Once), Steven Spielberg (The Fabelmans), Todd Field (Tar),Ruben ostlund (Triangle of Sadness) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் Everything Everywhere All at Once படத்திற்காக Daniel Kwan  மற்றும் Scheinert விருது பெறுவார்கள் என சொல்லப்படுகிறது. 

சிறந்த நடிகை 

Cate Blanchett (Tar), Ana de Armas(Blonde), Andrea Riseborough (To Leslie), Michelle Williams (The Fabelmans), Michelle Yeoh (Everything Everywhere All at Once) ஆகிய நடிகைகளில் Michelle Yeoh அதிகம் வெல்வதற்கு வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. 

சிறந்த நடிகர்

Austin Butler (Elvis), Colin Farrell (The Banshees of Inisherin), Brendan Fraser (The Whale), Paul Mescal (Aftersun), Bill Nighy (Living) ஆகியோரில் சிறந்த நடிகராக Austin Butler-க்கு விருது கிடைக்கவே வாய்ப்புள்ளது. 

சிறந்த துணை நடிகை 

Angela Bassett (Black Panther: Wakanda Forever), Hong Chau (The Whale), Kerry Condon (The Banshees of Inisherin), Jamie Lee Curtis (Everything Everywhere All at Once), Stephanie Hsu (Everything Everywhere All at Once) ஆகியோர் இந்த பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இதில் Kerry Condon விருது வாங்குவார் என கணிக்கப்பட்டுள்ளது. 

சிறந்த துணை நடிகர் 

Brendan Gleeson (The Banshees of Inisherin), Brian Tyree Henry (Causeway), Judd Hirsch (The Fabelmans), Barry Keoghan (The Banshees of Inisherin), Ke Huy Quan (Everything Everywhere All at Once) ஆகியோரில் சிறந்த துணை நடிகராக Ke Huy Quan தேர்வு செய்யப்படலாம் என ரசிகர்கள் கணித்துள்ளனர். 

சிறந்த பாடல் 

Applause (Tell It Like a Woman), Hold My Hand (Top Gun: Maverick), Lift Me Up (Black Panther: Wakanda Forever), Naatu Naatu (RRR), This Is a Life (Everything Everywhere All at Once) ஆகிய 5 பாடல்களில் ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு (Naatu Naatu) பாடல் ஆஸ்கர் விருது வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சிறந்த காட்சியமைப்பு 

All Quiet on the Western Front, Avatar: The Way of Water, The Batman, Black Panther: Wakanda Forever,Top Gun: Maverick ஆகிய 5 படங்களில்  Avatar: The Way of Water படம் விருது வெல்ல அதிக வாய்ப்புள்ளது. 

09:18 AM (IST)  •  13 Mar 2023

Oscars 2023 LIVE: ஆஸ்கர் விருது வென்றது புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது - கீரவாணி பெருமிதம்

ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றது. விருதை வென்ற இசையமைப்பாளர் கீரவாணி இயக்குநர் ராஜமௌலிக்கு நன்றி கூறினார். மேலும் கார்பெண்டர்ஸ் என்ற அமெரிக்க இசைக்குழுவின் பாடல்களை கேட்டுத்தான் நான் வளர்ந்தேன். இந்த வெற்றி என்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 

09:09 AM (IST)  •  13 Mar 2023

Oscars 2023 LIVE: சிறந்த நடிகை, படம் விருதுகளை வென்ற “Everything Everywhere All at Once” படம்

95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த படம், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, இயக்குநர், திரைக்கதை, எடிட்டிங் உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருதுகளை “ Everything Everywhere All at Once” படம் வென்றுள்ளது. 

08:57 AM (IST)  •  13 Mar 2023

Oscars 2023 LIVE: சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All at Once படம்

Everything Everywhere All at Once  படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை டேனியல் குவான் , டேனியல் ஷீனெர்ட் பெற்றுக் கொண்டனர். இந்த படம் இதுவரை 5 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளது. 

08:29 AM (IST)  •  13 Mar 2023

Oscars 2023 LIVE: ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு ஆஸ்கர்..!

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது. 

 

08:26 AM (IST)  •  13 Mar 2023

Oscars 2023 LIVE: ஆஸ்கர் விருதை வென்றது ”Top Gun: Maverick ” - சிறந்த ஒலியமைப்பு பிரிவில் தேர்வு

டாம் க்ரூஸின் Top Gun: Maverick படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது - சிறந்த ஒலியமைப்பு பிரிவில் தேர்வு  

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஓயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஓயிட் வாஷ்...
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!Chennai Food Festival : ’’பீப் ஏன் இடம்பெறல?’’பொங்கி எழுந்த நீலம்! OFF செய்த அரசு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஓயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஓயிட் வாஷ்...
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
Year Ender 2024: டேட்டிங் தொடங்கி மோடியின் டீப் ஃபேக், ”செத்துப்போ” சாபம் வரை - 2024ல் AI செய்த 5 நூதன சம்பவங்கள்
Year Ender 2024: டேட்டிங் தொடங்கி மோடியின் டீப் ஃபேக், ”செத்துப்போ” சாபம் வரை - 2024ல் AI செய்த 5 நூதன சம்பவங்கள்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Embed widget