Oscar Awards 2023: சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது இந்தியாவின் “The Elephant Whisperers”
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை இந்தியாவின் The Elephant Whisperers படம் வென்றுள்ளது.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை இந்தியாவின் The Elephant Whisperers படம் வென்றுள்ளது.
முன்னதாக இந்த பிரிவில் The Elephant Whisperers, Haulout, How Do You Measure a Year?, The Martha Mitchell Effect, Stranger at the Gate இந்த 5 படங்கள் போட்டியிட்ட நிலையில் ஆஸ்கர் விருது The Elephant Whisperers படத்துக்கு கிடைத்துள்ளது. யானை கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டியானைகளின் வாழ்வியலையும், இத்தகைய யானைகளை பரமாரிக்கும் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமின் தம்பதிகளின் வாழ்க்கையையும் இப்படம் தத்ரூபமாக காட்டியிருந்தது.
இந்த படத்தை கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கியிருந்தார். கடந்தாண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக குட்டி யானைகளின் பராமரிப்பு குறித்தும், அதை குடும்பத்தில் ஒருவராக பாவிக்கும் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதிகள் குறித்தும் இந்த குறும்படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.