Throwback | சின்னச்சின்ன வேலைகள்.. ஒரு வேளை உணவு.. சமந்தா பேசிய முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?
ஒரு நடிகையாக வேண்டும் என கனவு காணவில்லை எனவும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவே நடிகையாக மாறியதாகவும் அவர் தெரிவித்தார்.
தென்னிந்திய திரையுலகில் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்து தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்பவர் சமந்தா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாமல் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து ஆஸ்தான நாயகியாக மக்கள் மனதில் இடம்பிடித்து இருக்கும் அவர் விரைவில் பாலிவுட் படத்திலும் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இவர் பிரபல தெலுங்கு நடிகரும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை 7 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் நடித்து வந்த சமந்தா அடுத்தடுத்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார். இதனிடையே சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒரே நேரத்தில் விவாகரத்து முடிவை தத்தமது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.
இந்த விவாகரத்துக்காக நாக சைதன்யா குடும்பம் சமந்தாவுக்கு ரூ.200 கோடி ஜீவனாம்சம் தர முன் வந்ததாகவும், அதை சமந்தா ஏற்க மறுத்துவிட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. தன்னை நன்றாக பார்த்துக்கொள்ள தெரியும் என்றும் ஜீவனாம்சம் வேண்டாம் எனவும் சமந்தா கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. நாக சைதன்யா குடும்பம் ரூ.200 கோடி ஜீவனாம்சம் கொடுத்தும் அதை ஏற்க மறுக்கும் அளவுக்கு செல்வத்தாலும், புகழாலும் இன்று உயர்ந்து நிற்கும் சமந்தா ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்.
She proves to be my inspiration each and everyday. Not only by her words but also by her actions ✨. She is not just an example , a perfect role model 🔥.
— Prachi_Samantha (@Prachi96773628) October 3, 2021
We love you @Samanthaprabhu2 ❤. #WeLoveYouSamantha #Samantha #SamanthaRuthPrabhu pic.twitter.com/DEa1SM2n0W
சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு தனது ஆரம்ப கால வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்திருப்பார் சமந்தா. தான் ஒரு நடிகையாக வேண்டும் என கனவு காணவில்லை எனவும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவே நடிகையாக மாறியதாகவும் அவர் தெரிவித்தார். சினிமா துறைக்கு வருவதற்கு முன்பாக குடும்பத்தின் பொருளாதார கஷ்டத்தை சமாளிக்க சிறு சிறு வேலைகளை கூட செய்திருக்கிறார் சமந்தா.
“பள்ளி காலங்களிலும், இளங்கலை படிப்பிலும் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றேன். ஆனால், அடுத்து என்னால் மேற்படிப்பை தொடர முடியவில்லை. எனது குடும்ப சூழல் அதற்கு ஒரு முக்கிய காரணம். என்னுடைய பெற்றோர்களால் என் படிப்புக்கு அதிக தொகையை செலவழிக்க முடியவில்லை. எனக்கென தனியாக எந்த கனவையும், குறிக்கோளையும் நான் வைத்திருக்கவில்லை. குடும்ப சூழல் காரணமாக பொருள் ஈட்ட கடினமான சின்ன சின்ன வேலைகளை கூட செய்தேன். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டும் சாப்பிட்டு சமாளித்து வந்தேன். அப்போது தான் மாடலிங் சென்றால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று கேள்விப்பட்டேன். வாய்ப்பும் கிடைத்தது. அதன் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தேன்” என அவர் கூறினார்.
சமந்தா தெலுங்கில் நடித்த முதல் படம் “யே மாயா சீசாவே”. அந்த படம் ஹிட்டாக அடுத்தடுத்து வெற்றிப் பயணத்தை தொடங்கினார். தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் முன்னணி நடிகையாக உயர்ந்து இருக்கிறார். கோடிக்கணக்கில் ஜீவனாம்சம் பெறுவதற்காகவே சமந்தா விவாகரத்து செய்கிறார் என பலர் பல விதமாக பேசி வந்த நிலையில், அனைத்து வதந்திகளையும் பொய்யாக்கி ரூ.200 கோடியை என்ற பெரும் தொகையை உதறித் தள்ளியிருக்கிறார் சமந்தா எனவும் பேசப்பட்டு வருகிறது. எனினும் ஜீவனாம்சம் குறித்த தகவல் எதுவும் சமந்தா தரப்பில் இருந்து அளிக்கப்படவில்லை