மேலும் அறிய

Rajinikanth: ’தங்கம் என்ற தங்கையை மறந்த அண்ணாத்த’: சோகத்தில் கீர்த்தி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

மாமன்னன் படத்தை பார்த்து படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டிய நிலையில், அந்த சம்பவம் இணையவாசிகள் இடையே பேசுபொருளாக மாறியுள்ளது. 

மாமன்னன் படத்தை பார்த்து படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டிய நிலையில், அந்த சம்பவம் இணையவாசிகள் இடையே பேசுபொருளாக மாறியுள்ளது. 

மாமன்னன் படம் 

நடிகர் உதயநிதி ஸ்டாலின் கடைசிப் படம் என்ற தகவலோடு ‘மாமன்னன்’ படம் கடந்த ஜூன் 29 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். மாமன்னன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது.

மேலும் உதயநிதியின் கடைசிப்படம் என்பதால் ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும் பெரிய எதிர்ப்பார்ப்புடன் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர். படத்தின் வசனங்கள், காட்சிகள், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிப்பு என அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது. மேலும் திரையுலகினரும் மாமன்னன் படத்தை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் படத்தை பாராட்டி ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார். 

ரஜினிகாந்த் பாராட்டு

அந்த ட்வீட்டில், ’சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்’ என தெரிவித்திருந்தார். இதற்கு இயக்குநர் மாரி செல்வராஜ், ‘என் முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாளையும் கர்ணனையும் பார்த்து பாராட்டியதை போல என் மூன்றாவது படமான மாமன்னனையும் விருப்பத்தோடு பார்த்து பேரன்போடும் பெரும் ப்ரியத்தோடும் நேரில் அழைத்து மனதார பாராட்டிய நமது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு என் இதயத்திலிருந்து நிரம்பி வழியும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என கூறியிருந்தார். 

மேலும் உதயநிதியும், சமத்துவம் போற்றும் #மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்து அன்போடு வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்சார் அவர்களுக்கு #மாமன்னன் திரைப்படக்குழு சார்பில் அன்பும், நன்றியும் என தெரிவித்திருந்தார்.

இப்படியான நிலையில் ரஜினிகாந்த் ட்வீட்டிற்கு கீழே பலரும், “ஏன் மாமன்னன் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் பெயரை பதிவிடவில்லை?” என கேள்வியெழுப்பியுள்ளனர்.

தங்கத்தை மறந்த காளையன்

கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ படம் வெளியானது. இந்த படத்தில் காளையன் கேரக்டரில் ரஜினிகாந்தும், அவரின் தங்கையாக ‘தங்க மீனாட்சி’ கேரக்டரில் கீர்த்தி சுரேஷூம் நடித்திருந்தனர். ரஜினியின் தங்கை கேரக்டர் என்பதால் பொன்னியின்  செல்வன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை கூட கீர்த்தி சுரேஷ் மறுத்திருந்தார். அப்படியான கீர்த்தியை ஏன் ரஜினி பாராட்ட மறந்தார் என்பதே பலருக்கும் கேள்வியாக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Embed widget