இயக்குநர் பிரதாப் போத்தன் மறைவு இயற்கையா..? தற்கொலையா..? கடைசி பதிவால் எழுந்த சந்தேகம்..!
கடந்த சில நாட்களாகவே பிரதாப் போத்தன் மன உளைச்சலில் இருந்ததாகவும், நேற்று இரவு கூட தனது பேஸ்புக் பக்கத்தில் வாழ்க்கை குறித்து விரக்தியாகவும் பதிவிட்டுள்ளார்.
திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் (69) சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்பட மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தியில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.
இந்தநிலையில், 69 வயதான பிரதாப் போத்தன் இன்று சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடியில் குடியிருப்பில் இறந்து கிடந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே பிரதாப் போத்தன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில், நேற்று இரவு கூட தனது பேஸ்புக் பக்கத்தில் வாழ்க்கை குறித்து விரக்தியான ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அவர் கடைசியாக பதிவிட்ட அந்த பேஸ்புக் பதிவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
வாழ்க்கையின் பொருள் என்ன? - மறைந்த பிரதாப் போத்தன் இறுதியாக எழுதிய ஃபேஸ்புக் பதிவு
வாழ்க்கையின் பொருள் என்ன? என ஒருவர் கேட்ட கேள்விக்கு, “எனக்கு வாழ்க்கையின் பொருள் தெரிந்தால், நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால் இப்போதைக்கு, பிழைத்துக்கிடப்பதே வாழ்வின் பொருள் என நினைக்கிறேன்” என பிரதாப் போத்தன் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில், வாழ்க்கையில் வாழ்வதே ஒரு பெரிய விஷயமா இருக்கு, வாழ்க்கை என்பது என்ன என தெரிந்தால் நல்லாதான் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். பொதுவாக, ஒருவருக்கு தான் உயிரிழக்கும் முன்பே தனக்கு இறப்பு நெருங்கிவிட்டது என்று தெரிந்துவிடுமாம். அப்படியான கருத்துகள் அவ்வபோது வதந்திகளாக பரவினாலும், பிரதாப் போத்தன் உண்மையில் தான் உயிரிழக்க போவது தெரிந்து இத்தகைய பதிவை பதிவிட்டாரா...? அல்லது இத்தகைய பதிவை பதிவிட்ட பிறகு மன உளைச்சல் காரணமாக தன் உயிரை தானே மாய்த்து கொண்டாரா ..? என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.
இறப்பதற்கு முன்பு நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட பதிவை ஆதாரமாக கொண்டு காவல்துறை விரைவில் இவரது மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. இருந்தாலும், திரைத்துறையில் ஒரு மகா நடிகன் அந்தஸ்தில் இருந்த பிரதாப் போத்தனின் மறைவு கலைத்துறைக்கு ஈடு செய்யமுடியாத ஓர் பேரிழப்பு என்பதை யாராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாது.
பிரதாப் போத்தன் கடைசி சில வாழ்க்கை பற்றிய பதிவுகள் :
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்