(Source: ECI/ABP News/ABP Majha)
Nayanthara: அட்லீ படத்துக்காக அவார்ட் வாங்கிய நயன்தாரா.. வாழ்த்தாமல் கிண்டல் செய்யும் ரசிகர்கள்!
மும்பையில் 2024 ஆம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
இந்தியில் வெளியான ஜவான் படத்துக்காக நடிகை நயன்தாரா சிறந்த நடிகைக்கான விருது பெற்றுள்ளார்.
மும்பையில் 2024 ஆம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஜவான் படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை நயன்தாரா பெற்றார். இந்த விருதை அப்படத்தில் நடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் வழங்கினார். இந்த விருது வழங்கும் விழாவில் மஞ்சள் நிற சேலையில் வருகை தந்திருந்த நயன்தாராவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜவான் படத்துக்காக நடிகை நயன்தாரா பாராட்டுகளை பெற்று வரும் அதே நேரத்தில் அவருக்கு கிண்டலான பதிவுகளும் வெளியாகி வருகின்றன.
#Nayanthara wins the best female actor award for #Jawan at Dada Saheb Phalke International film festival awards 2024. @iamsrk @RedChilliesEnt @Atlee_dir #ShahRukhKhan #DadaSahebPhalke pic.twitter.com/XHwOhyFhUU
— 𝐒𝐡𝐚𝐡'𝐬𝐒𝐚𝐢𝐫𝐮🥀 (@ShahkiSaira) February 20, 2024
காரணம் தமிழிலிருந்து இந்திக்கு சென்று ஜவான் படத்தை இயக்கிய இயக்குனர் ஆற்றில் அந்த படத்தில் தான் ஏற்கனவே தமிழில் எடுத்த அனைத்து படங்களையும் படங்களையும் காட்சிகளையும் உருவி கலவையாக கொடுத்துள்ளதாக விமர்சனம் இருந்திருந்தது இப்படியான படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது கொடுக்கலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கோடிகளை குவித்த ஜவான் படம்
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கிய அட்லீ, இந்தியில் இயக்குநராக ஜவான் படத்தில் அறிமுகமானார். ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகிபாபு, சஞ்சய் தத், பிரியாமணி , சஞ்சீதா பட்டாசார்யா, சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்த ஜவான் படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக திரையரங்கங்கத்தில் வெளியான ஜவான் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. கதையில் பல படங்களை வழக்கம் போல கலந்து கட்டி அடித்திருந்தார் அட்லீ. ஆனால் இப்படத்தை பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடினர். ஜவான் திரைப்படம் வசூலில் ரூ.1000 கோடியை கடந்து சாதனைப் படைத்ததாக ரெட் சில்லி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வெறும் 17 நாட்களில் 1000 கோடி இலக்கை எட்டியது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Trisha: ஈனத்தனமான செயல்! திரிஷாவிற்காக குரல் கொடுத்த மன்சூர் அலிகான்!