Nayanthara Kids: இரட்டை குழந்தைகளுடன் முதன்முறையாக வெளியே வந்த நயன்தாரா..! இணையத்தை கலக்கும் கியூட் வீடியோ...!
மும்பை விமான நிலையத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தனது இரு குழந்தைகளுடன் வந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Nayanthara Kids : மும்பை விமான நிலையத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தனது இரு குழந்தைகளுடன் வந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நயன்-விக்கி
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா - திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக ஜூன் 9ம் தேதி நடைபெற்றது. திருமணம் முடிந்த நான்காவது மாதத்திலேயே இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து வாடகை தாய் விவகாரம் பூதாகரம் எடுத்தது.
ஏராளமான சட்ட சிக்கல்கள், விசாரணை நடைபெற்று கடைசியாக அரசு தரப்பில் வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்த விவகாரம் சட்டப்படி தான் என்ற பிறந்த தகவல் வெளியானது. எனவே, இவர்கள் உயிர். உலகம் எனக் குழந்தைகளுக்குப் பெயரிட்டு தங்கள் பெர்சனல் பக்கங்களை அவ்வளவாக வெளிப்படுத்தாமல், மீடியா வெளிச்சமின்றி தன் குழந்தைகளை வளர்த்து வருகின்றனர் நயன் தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர்.
குடும்ப வாழ்வில் நுழைந்தபோதும், தங்கள் சினிமா பயணத்தையும் தெளிவாகத் திட்டமிட்டு இருவரும் பயணித்து வரும் நிலையில், இவர்களது புகைப்படங்களும் வீடியோக்களும் அவ்வப்போது தொடர்ந்து ட்ரெண்டாகி வருகின்றன.
இரட்டை குழந்தைகளுடன் நயன்-விக்கி
இந்நிலையில், தங்களுடைய மகன்களாகிய இரட்டைக் குழந்தைகளின் முகத்தை இதுவரை எந்த ஒரு மீடியாவிலும் நயன்தாரா காட்டவில்லை. புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டத்தில் தனது மகன்களின் முகங்களை மட்டும் காட்டாமல் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வந்திருந்தார்.
Just spotted #Nayanthara & #VigneshShivan at the airport with their adorable twin babies 😍#LadySuperstarNayanthara @VigneshShivN @Rowdy_Pictures pic.twitter.com/tbdySNB1uF
— CONNECT🦋Nayanthariann (@Nayanthariann) March 8, 2023
இப்படி இருக்கும் சூழலில், மும்பை விமான நிலையில் நயன்தாரா தனது கணவர் மற்றும் மகன்களுடன் வந்துள்ளார். அதில், நயன்தாரா மற்றும் விக்கேஷ் தனது இரு குழந்தைகளையும் கையில் தூங்கிக் கொண்டு செல்கிறார்கள். மேலும், கியூட்டாக டங்கிரி உடை அணிந்திருந்த இரு குழந்தைகளை நயன்தாரா விக்னேஷ் தூக்கி கொண்டு செல்லும் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜவான்
இதற்கிடையில், ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் ஜவான் படத்தைத் தயாரிக்கும் நிலையில், ஷாருக் - நயன் தாராவுடன் விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். வரும் ஜூன் 2ஆம் தேதி ஜவான் வெளியாகும் என ஏற்கெனவே படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க