மேலும் அறிய

Dhanush : தனுஷை மிரட்டிய நயன்தாரா விக்னேஷ் சிவன்...வெளிவரும் புதிய உண்மைகள்

நயன்தாராவின் தரப்பைக் கேட்டு பலர் நடிகர் தனுஷை விமர்சித்து வரும் நிலையில் தற்போது தனுஷ் தரப்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன

தனுஷ் நயன்தாரா சர்ச்சை

நடிகை நயன்தாரா தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் முக்கிய குற்றச்சாட்டு நயன்தாராவைப் பற்றி நெட்ஃப்லிக்ஸ் தயாரித்துள்ள ஆவணப்படத்திற்கு நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயண்படுத்த தனுஷ் அனுமதி வழங்காததை நயன்தாரா குறிப்பிட்டுள்ளார். மேலும் வேறு ஒரு தனிநபரின் செல்ஃபோனில் எடுத்த படப்பிடிப்பு வீடியோவை பயன்படுத்தியதற்காக தனுஷ் பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதும் இந்த சர்ச்சையில் முக்கிய குற்றச்சாட்டாக இடம்பெற்றுள்ளது. நயன்தாராவின் அறிக்கை வெளியாகி தனுஷ் மீது பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. நயன்தாரா மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் தனுஷ் மீது கடும் தாக்குதலை சமூக வலைதளங்களில் தொடங்கியுள்ளார்கள். இப்படியான நிலையில் வலைப்பேச்சு வெளியிட்டுள்ள வீடியோ இந்த பிரச்சனையின் மறுபக்கத்தை விளக்கும்படி அமைந்துள்ளது.

தனுஷை மிரட்டிய நயன்தாரா விக்னேஷ் சிவன்

"விக்னேஷ் சிவன் மற்றும் நயன் இடையில் காதல் மலர்ந்தது நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது. அதனால் நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் மிக அவசியமாக தேவைப்பட்டன. அதனால் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனுஷிடம் நேரடியாக இதை கேட்காமல் தனுஷின் மேலாளரிடம் ஒரு டெக்னிக்கை கையாண்டிருக்கிறார். தனுஷின் மேலாளர் விக்னேஷ் சிவனுக்கு நல்ல நண்பர் என்பதால் விக்கி அவருக்கு நேரடியாக ஃபோன் செய்து நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயண்படுத்திக் கொள்வதில் வண்டர்பார் நிறுவனத்திற்கு எந்த ஆட்சேபனமும் இல்லை  என்கிற மாதிரி ஒரு மின்னஞ்சல் அனுப்ப சொல்லியிருக்கிறார்.

ஆனால் தனுஷிடம் கேட்காமல் தான் அப்படி அனுப்ப முடியாது என மேலாளர் தெரிவித்துள்ளார். பின் நெட்ஃப்ளிக்ஸ் சார்பாக தனுஷை அனுகி படபிடிப்பு காட்சிகளை பயனடுத்த அனுமதி கேட்டு தனுஷ் மறுத்துள்ளார். இதனால் கடுப்பான நயன் மற்றும் விக்கி தனுஷூக்கு எதிராக உண்ணா விரதம் இருக்கப்போவதாக மிரட்டியிருக்கிறார்கள். மேலும் இந்த பிரச்சனையை பொருவெளிக்கு கொண்டு வந்து தனுஷின் இமேஜை காலி செய்துவிடுவோம் என இருவரும் மிரட்டியதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.

நயன்தாராவின் அறிக்கையைப் பார்த்து தனுஷூக்கு எதிராக பேசிய பலருக்கு இந்த தகவல் அதிர்ச்சியளித்துள்ளது. இந்த சர்ச்சையில் மேலும் பல தரப்பு உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget