நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு உடன் நயன்தாராவின் திரைப்பயணம்,குடும்ப வாழ்க்கை, தொழில் உள்ளிட்டவைகள் குறித்து நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நவம்பர் 18-ம் வெளியாகிறது.
1 மணிநேரம் 21 நிமிடங்கள் கொண்ட நயன்தாரா ஆவணப்படம் வரும் நவம்பர்,18 ம் தேதி வெளியாக உள்ளது. இது நயன்தாரா பிறந்தநாள் அன்று வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ஆவணப்படத்தில் பி.டி.எஸ் காட்சிகளை பயன்படுத்த கடந்த 2 ஆண்டுகளாக தனுஷ் அனுமதி கேட்டுள்ளனர். அவர் மறுத்துவிட்டதாகவும் 3 நொடி காட்சி ஒன்றை பயன்படுத்தியதற்காக தனுஷ் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தனுஷ்-க்கு எதிராக நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
”பிசினஸ் ரீதியான காரணங்களுக்கு நீங்கள் அனுமதி வழங்கவில்லை என்றால் கூட பரவாயில்லை ஆனால் எங்கள் மீதான தனிப்பட்ட வன்மத்தை வெளிப்படுத்தவே நீங்கள் இந்த அனுமதி வழங்கவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் நயன்தாராவுக்கு ஆதரவாகவும் தனுஷ் பற்றி சில எதிர்ப்பு கருத்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
தனுஷ் தயாரிப்பில் உருவான எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு நயன்தாரா இலவசமாக நடனமாடி கொடுத்திருந்தார் என்று அந்த கூறப்பட்டது.
நடிகைகள் பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஸ்ருதிஹாசன், அனுபமா பரமேஸ்வரன், நஸ்ரியா, கவுரி கிஷன், காயத்ரி ஷங்கர், நமீதா கிருஷ்ணமூர்த்தி, அபிராமி உள்ளிட்ட பலரும் லைக் செய்துள்ளனர்.
இந்த சர்ச்சையில் மேலும் பல தரப்பு உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.