மேலும் அறிய

தென்னிந்திய படங்களுக்கு மட்டும் ஏன் ‘பான் இந்தியா’ டேக்? - நானி கேள்வி

தென்னிந்திய திரைப்படங்களுக்கு மட்டும் ‘பான் இந்தியா’ என்ற அடையாளம் வழங்கப்படுவது ஏன் என நடிகர் நானி கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி பாரடைஸ்’. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள இப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில், தனது படத்தை ‘பான் இந்திய’ திரைப்படம் என்று அழைப்பதை விரும்பவில்லை என நானி தெரிவித்தார். இதற்கான காரணம் குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் கவனம் பெற்றுள்ளது.

பான் இந்திய வார்த்தை பயண்பாடு குறித்து நானி

“மேடம், உண்மையில் என்னுடைய ஒவ்வொரு படத்தையும் பான் இந்திய திரைப்படம் என்று அழைக்கும் போதெல்லாம், அதை அழைக்க வேண்டாம் என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனால், நான் அப்படிச் சொன்ன உடனே அதுவே ஒரு விவாதமாகிவிடுகிறது. ஒரு திரைப்படத்தை ‘பான் இந்திய’ என்று அழைக்கக் கூடாது என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

தென் இந்திய படங்களுக்கு மட்டும் ஏன் ?

உதாரணமாக, ஒரு இந்தி திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மிகப்பெரிய வெற்றி பெற்றாலும், அந்தப் படத்தை ‘பான் இந்திய’ திரைப்படம் என்று அழைப்பதில்லை. அது தொடர்ந்து இந்தி திரைப்படமாகவே அழைக்கப்படுகிறது. ‘ஜவான்’, ‘பதான்’ போன்ற திரைப்படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றபோதும், அவை பான் இந்திய திரைப்படங்கள் என்று அழைக்கப்படவில்லை. அவை இந்தி திரைப்படங்களாகவே இருக்கின்றன.

ஆனால், ஒரு தெலுங்கு திரைப்படம் வட இந்தியாவிலும் நாடு முழுவதும் வெற்றி பெற்றால், அதை ‘பான் இந்திய’ திரைப்படம் என்று அழைக்கிறார்கள். அதேபோல், ஒரு தமிழ் அல்லது கன்னட திரைப்படம் மற்ற பகுதிகளில் வெற்றி பெற்றாலும் அந்த அடையாளம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, ‘பான் இந்திய’ என்ற வார்த்தை ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது எனக்கு புரியவில்லை. குறிப்பாக, தென்னிந்திய திரைப்படங்களுக்கு மட்டும் ஏன் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது? இந்தி திரைப்படங்களுக்கு ஏன் பயன்படுத்தப்படுவதில்லை?

என்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திற்காகவும் நான் இதையே தொடர்ந்து சொல்லி வருகிறேன். என்னுடைய படத்தை பான் இந்திய திரைப்படம் என்று அழைக்க வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள். எல்லோரும் திரைப்படங்களை பான் இந்திய என்று அழைப்பதை என்னால் தடுக்க முடியாது. ஆனால், அந்த வார்த்தை எனக்கு அர்த்தமுள்ளதாக தெரியவில்லை.

என்னுடைய திரைப்படங்கள் தமிழ் ரசிகர்கள், இந்தி ரசிகர்கள், மலையாள ரசிகர்கள், கன்னட ரசிகர்கள் என அனைத்து மொழி ரசிகர்களையும் சென்றடைய வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். இனிமேலும் இதுதான் என்னுடைய செயல்முறையாக இருக்கும். ஆனால், என்னுடைய திரைப்படங்களுக்கு அந்த பான் இந்திய அடையாளத்தை பயன்படுத்த வேண்டாம் என்பதே எனது விருப்பம். இருப்பினும், அந்த வார்த்தை தொடர்ந்து பயன்படுத்தப்படலாம். அதில் என்னால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. என்னால் அதை குறிப்பிடவோ, வேண்டுகோள் விடுக்கவோ மட்டுமே முடியும்” என்றார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget