மேலும் அறிய

Nani 33: அடுத்த படத்துக்கு புது மாஸ் கெட்- அப்.. வெற்றி இயக்குநருடன் மறுபடி கூட்டணி: நடிகர் நானி தந்த அப்டேட்!

Actor Nani Next Movie: தசரா வரிசையில் நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இருவரும் புதிய படத்தில் மீண்டும் இணைகிறார்கள்

காதல் மற்றும் ஆக்சன் டிராமா ஜானரில் கடந்த ஆண்டு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி (Nani) நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி கலெக்‌ஷன் அள்ளிய திரைப்படம் ‘தசரா’.

தசரா கூட்டணி

கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய் குமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். புதுமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கிய இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். தெலுங்கில் வெளியான இப்படம் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பாடு பான் இந்திய படமாக வெளியானது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கதைரீதியாக அனைத்து தரப்பினரையும் பூர்த்தி செய்யாவிட்டாலும், கடந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியது. இப்படத்தின் பாடல்கள் சூப்பர்ஹிட் அடிக்க, நடிகர் நானி நடிப்பில் வெளியாகி அதிக வசூல் செய்த படமாகவும் தசரா உருவெடுத்தது. இந்த நிலையில், தசரா திரைப்படத்தின் கூட்டணி  சூப்பர் அப்டேட் ஒன்றை தற்போது பகிர்ந்துள்ளது. 

அடுத்த பட மாஸ் அப்டேட்

அதன்படி தசரா வரிசையில் நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இருவரும் புதிய படத்தில் மீண்டும் இணைகிறார்கள். ‘நானி 33’ என அறிவிக்கப்பட்டுள்ள படத்தை ஸ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ்  சார்பில் சுதாகர் செருக்குரி தயாரிக்கிறார்.  இப்படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரசிகர்களுக்கு முதற்கட்டமாக போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்து படக்குழு உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிவப்பு நிற மாஸான போஸ்டரின் பின்னணியில் நானி இடம்பெற்றிருக்கும் நிலையில், தலைவராக இருக்க அடையாளம் தேவையில்லை என்ற வாசகமும் இந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Nani (@nameisnani)

தசரா திரைப்படம் வெளியாகி நேற்றுடன் ஓராண்டு கடந்துள்ள நிலையில், இப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. தசரா திரைப்படத்தின் போஸ்டர்களும் இதே போல் எதிர்பார்ப்பைக் கிளறிய நிலையில் இப்படமும் அதே பாணியில் காதல் , ஆக்‌ஷன் நிறைய இருக்கும் என ரசிகர்கள் கணித்து வருகிறார்கள். மேலும் 2025ஆம் ஆண்டு பான் இந்திய திரைப்படமாக கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: Daniel Balaji: நான் ரசிக்கும் கலைஞன்.. டேனியல் பாலாஜி நடிப்பைப் பார்ந்து மெய்மறந்து சேரன் செய்த செயல்!

Daniel Balaji: "கடைசிவரை நிறைவேறாத டேனியல் பாலாஜியின் ஆசை” - மனமுடைந்த பேசிய பத்து தல இயக்குநர்!

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget