மேலும் அறிய

Nandamuri Balakrishna: தெலுங்கு சினிமாவே அதிர்ஷ்டமாக நினைக்கும் பாலகிருஷ்ணாவின் மனைவி வசுந்தரா! - என்ன காரணம்?

பாலகிருஷ்ணாவை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் வசுந்தராவிடம் இருந்து பணம் கொடுத்து பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தொடர்ச்சியாக சர்ச்சையில் பாலகிருஷ்ணா சிக்கி வரும் நிலையில், தெலுங்கு சினிமாவே அவரது மனைவி வசுந்தரா தேவியை அதிர்ஷ்டமானவராக பார்க்கிறது. அதன் பின்னணி என்பதை காணலாம். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு கிங் ஆஃப் கோதாவரி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நந்தமுரி பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மேடையில் நடிகை அஞ்சலியை நகர்ந்து நிற்க சொல்வதற்காக பிடித்து தள்ளிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி கடும் விமர்சனங்களை சந்தித்தது. அதேசமயம் பாலகிருஷ்ணா மேடைக்கு கீழே அமர்ந்திருக்கும்போது அவரின் காலுக்கடியில் ஒரு பாட்டிலில் தண்ணீரும், இன்னொரு பாட்டிலில் மதுபானம் போன்ற திரவம் இருந்த வீடியோவும் வைரலானது. 

ஆனால் பாலகிருஷ்ணாவுக்கும் தனக்கும் பல ஆண்டுகால நட்பு இருப்பதாக சொல்லி நடிகை அஞ்சலி இந்த பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். இப்படி பாலகிருஷ்ணா சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஆனால் அவரது மனைவி வசுந்தரா தேவியை தெலுங்கு சினிமாவே அதிர்ஷ்டசாலியாக பார்க்கிறது. 

அதாவது, “ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சராக இருந்த என். டி. ராமராவ் மகனான நந்தமுரி பாலகிருஷ்ணா குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 63 வயதான அவர் இன்று தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். பாலகிருஷ்ணாவின் மனைவி பெயர் வசுந்தரா தேவி. அவரை அடிக்கடி பாலகிருஷ்ணா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் காணலாம். அவர் தேர்தலில் போட்டியிட்டபோது வசுந்தரா தேவி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாலகிருஷ்ணாவை பொறுத்தவரை தனது மனைவியை மிகவும் அதிர்ஷ்டமானவராக கருதுகிறாராம். அவர் மட்டுமல்ல தெலுங்கு சினிமாவே வசுந்தராவை அப்படித்தான் நம்புகிறது. 

பாலகிருஷ்ணாவை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் வசுந்தராவிடம் இருந்து பணம் கொடுத்து பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல் பாலகிருஷ்ணா வெளியே செல்லும்போது வசுந்தரா தேவி எதிரே வந்து செல்வதை நல்ல சகுணமாக நினைப்பாராம். 1982 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட இந்த தம்பதியினருக்கு நரா பிராஹ்மனி, தேஜஸ்வினி நந்தமுரி என்ற இரு மகள்களும், மோக்‌ஷங்கா தேஜா என்ற மகனும் உள்ளனர். விரைவில் மோக்‌ஷங்கா தேஜா ஹீரோவாக அறிமுகமாவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தன் கணவருக்கு ஒன்று என்றால் எங்கிருந்தாலும் உடனே வசுந்தரா வந்து விடுவார். ஒருமுறை தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக டென்ஷன் ஆன பாலகிருஷ்ணா தன் சொந்த கட்சியினரிடம் மிக மோசமாக நடந்து கொண்டார். ஆனால் அன்பின் மிகுதியால் தான் பாலகிருஷ்ணா அப்படி நடந்து கொண்டார் என வசுந்தரா தேவி சொன்னதும் தான் பிரச்சினை முடிவுக்கு வந்ததாம்” என சினிமா வட்டாரத்தில் தகவல் தெரிந்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
TVK Vijay: “பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
“பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
ABP Premium

வீடியோ

”விசில் போடு...” TVK கேட்ட அதே சின்னம் நிறைவேறிய விஜய்யின் ஆசை
அதெப்படி திமிங்கலம்..! கால்வாய்க்கு கொசுவலை சென்னை மாநகராட்சி NEW IDEA
கேரளாவை உலுக்கிய தற்கொலை தலைமறைவான ஷிம்ஜிதா தேடுதல் வேட்டையில் போலீஸ்
அதிமுகவில் காளியம்மாள்? நாகை MLA சீட் டிக் அடித்த EPS
”MUSLIM மட்டுமா ஹிஜாப் போடுறோம்?வடமாநில பெண்களும் போடுறாங்க”பெண் கவுன்சிலர் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK - AMMK: 10 தொகுதிகள் கேட்கும் தினகரன்.. கேட்கும் இடங்கள் தருவாரா எடப்பாடி பழனிசாமி?
TVK Vijay: “பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
“பாதுகாப்பின் அடையாளம் விசில்“; தவெக தலைவர் விஜய் அறிக்கை; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுக்கு நிர்வாணப் படம் கேட்டு ஆபாச மிரட்டல் !! இளைஞர் கைது
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
Affordable Sedans Cars India: டாடா டிகோர் முதல் மாருதி டிசையர் வரை; மலிவான, தரமான செடான் கார்கள் லிஸ்ட்; பார்த்து செலெக்ட் பண்ணுங்க
டாடா டிகோர் முதல் மாருதி டிசையர் வரை; மலிவான, தரமான செடான் கார்கள் லிஸ்ட்; பார்த்து செலெக்ட் பண்ணுங்க
Mankatha Re Release: தியேட்டரில் திருவிழா.. மங்காத்தா நாளை ரீ ரிலீஸ்.. அட்டகாசப்படுத்தும் அஜித் ரசிகர்கள்!
Mankatha Re Release: தியேட்டரில் திருவிழா.. மங்காத்தா நாளை ரீ ரிலீஸ்.. அட்டகாசப்படுத்தும் அஜித் ரசிகர்கள்!
Embed widget