Nadigar Sangam Pongal Gift: நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிய நாசர்!
Nadigar Sangam Pongal Gift: நடிகர் சங்கத்தை சேர்ந்த 2,500 பேருக்கு வேஷ்டி, சேலை, கருப்பு, இனிப்பு உள்ளிட்டவைகள் பொங்கல் பரிசாக நடிகர் சங்க தலைவர் நாசர் வழங்கியுள்ளார்.
Nadigar Sangam Pongal Gift: நடிகர் சங்கத்தில் உள்ள 2500 உறுப்பினர்களுக்கு வேஷ்டி, சேலை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புகளை சங்கத் தலைவர் நாசர் வழங்கினார்.
தமிழர் திருநாளான பொங்கல் விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்காக தமிழக மக்கள் தயாராகி வரும் நிலையில் தமிழக அரசு நியாய விலைக்கடைகள் மூலம் மக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1000 பணத்தை வழங்கி வருகிறது.
இந்தச் சூழலில் தமிழ் திரையுலக நடிகர் சங்கம் தரப்பில் சினிமா நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடிகர் சங்கத்தை சேர்ந்த 2,500 பேருக்கு வேஷ்டி, சேலை, கருப்பு, இனிப்பு உள்ளிட்டவற்றை பொங்கல் பரிசாக நடிகர் சங்கத் தலைவர் நாசர் வழங்கியுள்ளார்.
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு(2500 பேர்)பொங்கல் பரிசாக வேஷ்டி,சேலை,கரும்பு மற்றும் இனிப்பை
— nadigarsangam pr news (@siaaprnews) January 13, 2024
தலைவர் நாசர் கலந்து கொண்டு வழங்கினார்.
வெளியூரில் வசிப்பவர்களுக்கும் அனுப்பிவைக்கப் பட்டது.
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறிய நாசர் அவர்கள்,வருகிற 19ம் தேதி மாலை 6மணிக்கு, pic.twitter.com/QZR1kAn9fC
சென்னையில் நேரில் வந்து வாங்கியவர்களைத் தவிர்த்து, வெளியூர்களில் இருக்கும் உறுப்பினர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய பின்னர், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்த நாசர், வரும் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் காமராஜர் அரங்கில் நினைவஞ்சலி நடத்தப்படும் என்றார். அந்த நினைவஞ்சலி கூட்டத்தில் நடிகர், நடிகைகள், நாடகம் மற்றும் துணை நடிகர் நடிகைகள் என அனைவரும் அவசியம் கலந்து கொள்ளுமாறு நாசர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் படிக்க: Amaithi Padai: ”அரசியலின் மறுபக்கத்தை கூறிய நாகராஜ சோழன் எம்.எல்.ஏ.” - 30வது ஆண்டில் அமைதிப்படை