வரலாறு அஜித்தும்... தெறி விஜய்யும்... ‛நானே வருவேன்’ தனுஷ் கதாபாத்திரங்களா?
Naane Varavan: தனுஷ் நடித்த இரு கதாபாத்திரங்களுமே ஏற்கனவே வெளியான இரு கதாபாத்திரங்களின் சாயலில் இருப்பது தெரிகிறது.
‛காடெல்லாம் உன் அரசாங்கம் வாடா...’ இந்த பாடல் வரி தான் முழு படத்தின் அம்சம். பொன்னியின் செல்வன் படத்தோடு நேருக்கு நேர், நெத்திக்கு நெத்தி மோதியிருக்கும் ‛நானே வருவேன்’ படமும், பொன்னியின் செல்வனோடு போட்டி போடும் அளவிற்கு பேசப்பட்டு வருகிறது.
செல்வராகவன்-தனுஷ்-யுவன்சங்கர்ராஜா கூட்டணியில் அதிக எதிர்பார்ப்போடு வெளியான நானே வருவேன் படம், தனுஷ் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, சைக்கோ கதாபாத்திரத்தில் வரும் ‛கதிர்’ தனுஷ், நீண்ட நாட்களுக்குப் பின் நடிப்பில் பேசப்படுகிறார். அதிலும் அவரது காட்டு வழி பயங்கரம், கதை மீதும், அந்த கதாபாத்திரம் மீதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தனுஷ் நடித்த இரு கதாபாத்திரங்களுமே ஏற்கனவே வெளியான இரு கதாபாத்திரங்களின் சாயலில் இருப்பது தெரிகிறது. முதலில் கதிர் பாத்திரத்திற்கு வருவோம்..
View this post on Instagram
வரலாறு படத்தில் அஜித்தை பழிவாங்க காத்திருக்கும் இன்னொரு அஜித்தின் தோற்றம் போலவே கதிர் தனுஷ் கதாபாத்திரம் உள்ளது. தலை முடி, நடை, உடை ஏன், வாயில் வைத்திருக்கும் சிகரெட் முதற்கொண்டு வரலாறு அஜித் கதாபாத்திரம் போலவே உள்ளது. இரு கதாபாத்திரங்களுமே ஒரு மாதிரியான சைக்கோ கதாபாத்திரங்கள் தான். அப்படி தான், தனுஷ் கதாபாத்திரம் நம் கண் முன் தெரிகிறது. வரலாறு படத்தின் அந்த கதாபாத்திரம் எடுக்கும் போது, அஜித் உடல் எடை குறைத்து மிக ஒல்லியாக இருந்தார். அதனால், தனுஷை அதே மாதிரி பார்க்கும் போது, அப்படியே அஜித் கதாபாத்திரமாகவே தெரிகிறது.
சரி, கதிர் கதாபாத்திரம் தான் இப்படி என்றால், மற்றொரு தனுஷின் பிரபு கதாபாத்திரம், தெறி படத்தில் வரும் விஜய் மாதிரி இருக்கிறது. மகளோடு கொஞ்சி மகிழும் அதே கதாபாத்திரம். கண்ணாடி, ட்ரிம் தாடி என எல்லாமே தெறி படத்தில் வரும் குருவில்லா விஜய் கதாபாத்திரம் போலவே தான் நானே வருவேன் பிரபு கதாபாத்திரம் இருக்கிறது. இன்னும் சந்தேகம் இருந்தால், யூடியூப்பில் வரும் நானே வருவேன் மகள் சென்டிமெண்ட் பாடலை பாருங்கள், உங்களுக்கே புரியும்.
இப்படி, அஜித்-விஜய் என இருவரின் சாயலில் அப்படியே பொருந்திப் போயிருக்கும் தனுஷ், தானாகவே அதில் வாழ்ந்திருக்கிறார். கூர்ந்து கவனித்தால் தான், அது புரியும்.