“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
முத்துக்குமரன் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்து வகிதா அக்தர் முத்துக்குமரன் உடனான செல்ஃபோன் உரையாடலை வெளியிட்டுள்ளார்

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளர் முத்துக்குமரன் மற்றும் சமூக வலைதளப் பிரபலம் வஹிதா அக்தர் இடையேயான விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது. முத்துக்குமரன் மீது வஹிதா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோக்களை வெளியிட்ட நிலையில், தற்போது இருவரும் பேசியதாக அவர் பகிர்ந்துள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
முத்துக்குமரன் மீது வஹிதா குற்றச்சாட்டு
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றவர் முத்துக்குமரன். நிகழ்ச்சிக்குப் பிறகும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வரும் இவர், தற்போது வஹிதா அக்தர் விவகாரத்தால் பேசப்பட்டு வருகிறார்.
வஹிதா அக்தர், முத்துக்குமரன் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக நம்ப வைத்து நெருக்கமாகப் பழகியதாகக் குற்றம்சாட்டி வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவுகள் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
செல்ஃபோன் உரையாடல்
இந்தச் சூழலில், முத்துக்குமரன் உடன் வகிதா செல்ஃபோனில் பேசிய உரையாடல் வெளியாகியுள்ளது. அதில், இருவருக்கும் இடையேயான உறவு மற்றும் அதற்கு என்ன முடிவு எடுப்பது என்பது தொடர்பான உரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஆடியோவில், “இதுக்கு என்ன முடிவு சொல்லு” என்று முத்துக்குமரன் கேட்பதாகக் கேட்கிறது. அதற்கு வஹிதா, “நான் உங்களைக் கைது பண்ணிட்டாங்களான்னு கேட்கத்தான் கால் பண்ணேன். வெறும் ஃபிரெண்ட்ஷிப் தான் பெட் வரைக்கும் போகுமா? False hope கொடுத்திருக்கீங்க” என்று பேசுவதாக இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து, “இதுக்கு என்ன closure, அதச் சொல்லு” என்று முத்துக்குமரன் கேட்பதாகவும், “மார்ச்சில் இருந்து பேசுறோம். நான் எப்பயாவது தப்பா நடந்திருக்கேனா? நான் எப்பயாவது misbehave பண்ணிருக்கேனா?” என்று அவர் கேட்பதாகவும் ஆடியோவில் இடம்பெற்றுள்ளது.
“ஃபிரண்டோடதான் படுப்பீங்களா?” – வஹிதா கேள்வி
அந்த உரையாடலில், “ஃபிரண்டோடதான் படுப்பீங்களா?” என்று வஹிதா கேட்பதாகக் கேட்கிறது. அதற்குப் பதிலளிக்கும் முத்துக்குமரன், “நீ அந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் போடுறதுக்காகவா எடுத்த?” என்று கேட்பதாக ஆடியோவில் இடம்பெற்றுள்ளது.
மேலும், “நீ பார்ட் டைம் பாய் ஃபிரெண்டா இருக்கச் சொல்லி சீரியஸாகக் கேட்டியா?” என்றும், “நீ விளையாட்டுக்குக் கேட்டுட்டு இதோட விட்டுடலாம்… நான் என்ன பண்ணனும்னு நினைக்கிற?” என்றும் முத்துக்குமரன் கேட்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, வஹிதா மீண்டும் “ஃபிரண்ட் கூடதான் படுப்பீங்களா?” என்று கேள்வி எழுப்புவதாக ஆடியோவில் கேட்கிறது.
தொடர்ந்து வெளியாகும் வீடியோக்கள்
ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக வஹிதா வெளியிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டன. தற்போது வெளியாகியுள்ள ஆடியோவும் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முத்துக்குமரனின் தரப்பு விளக்கம் வெளியாகாத நிலையில், வஹிதா வெளியிட்டு வரும் வீடியோக்களும் ஆடியோவும் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. ஆடியோவில் இடம்பெற்றுள்ள உரையாடலின் முழுமையான பின்னணி குறித்து இரு தரப்பினரின் விளக்கங்களும் வெளிவந்தால் மட்டுமே இந்த விவகாரத்தின் முழு விவரங்களை அறிய முடியும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















