மேலும் அறிய

Music Director Thaman: சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் தமன்.. போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தல்...

சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியில் நீதிபதியாக பங்கேற்றுள்ள இசையமைப்பாளர் தமன் போட்டியாளர்களுக்கு படத்தில் பாடல் பாட வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சர்ப்ரைஸ்களை கொடுத்து அசத்தி வருகிறார்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நீதிபதியாக கலந்துகொண்டுள்ள இசையமைப்பாளர் தமன் பாடகர்களோடு இயல்பாக பழகுவதில் ஆரம்பித்து, அவர்களுக்கு பல சர்ப்ரைஸ்கள் கொடுத்து வருகிறார். பல பாடகர்களுக்கும் அவர்களின் வாழ்வில் மாற்றத்தை தரும் வாய்ப்பை வழங்கி வருகிறார்.  இசையமைப்பாளார்  தமனின் இந்த செயல்கள் ஏராளமானோரின்  பாராட்டைப் பெற்று வருகிறது. 

தமிழ்நாட்டு இளம் இசைத் திறமையாளர்களின் வாழ்வில் மாற்றத்தை தந்து வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. சிறுவர்களுக்காக தற்போது நடந்து வரும், சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 வது சீசனில் இசையமைப்பாளர் தமன் நீதிபதியாக கலந்துகொண்டிருக்கிறார். பொதுவாக பாட்டுப்போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நடுவர்கள் பாடகர்களிடம் இறுக்கமாகவும்,  கண்டிப்பாகவும் நடந்து கொள்வார்கள்.  ஆனால், இதற்கு முன்பு கலந்துகொண்ட நீதிபதிகள் போல் அல்லாமல்,  போட்டியாளர்களோடு மிக எளிமையாக பழகுவது, அவர்களுக்கு ஊக்கம் தருவது, சர்ப்ரைஸ் தருவது, சுவாரஸ்யமான கமெண்ட்கள் தந்து உற்சாகப்படுத்துவது, என அசத்தி வருகிறார் தமன். 

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில், இந்த சீசனில் பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அனைவரையும் தன் பாடலால் உருக வைத்த கண் பார்வையற்ற சிறுமி புரோகித ஶ்ரீக்கு பார்வை கிடைக்க அனைத்து உதவிகளையும் செயவதாக உறுதியளித்த இசையமைப்பாளர் தமன், கானா பாடலை பாடி அசத்திய சிறுவன் கலர்வெடி கோகுலுக்கு திரைப்படத்தில் பாடல் பாட வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார். 

கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியில், ஹரிணி, ரிச்சா  ஆகிய இரு பாடகர்கள் “ஊர்வசி ஊர்வசி” பாடலை மிக அற்புதமாக பாடினார்கள். அவர்கள் பாடிய வீடியோவை, கண்டிப்பாக  ஏ.ஆர்.ரஹ்மானிடம் பகிர்வதாக வாக்குறுதி தந்தார் தமன்.  கௌரவ் எனும் பாடகர் “ரஞ்சிதமே ரஞ்சிதமே” பாடலை பாடினார். அதில் இம்ப்ரெஸ் ஆன தமன், அனிருத் மற்றும் தளபதி விஜய்யிடம் கூட்டிப்போவதாக வாக்குறுதி தந்தார். 

இது மட்டுமல்லாமல் பிரபல பாடகர் ஆண்டனி தாஸ், தமனிடம் வாய்ப்புகேட்க அவருக்கு  ஒரு புதிய தெலுங்கு படத்தில் பாடல் வாய்ப்பு தந்துள்ளார். அந்தப்பாடல் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. தமன் நீதிபதியாக அல்லாமல், அனைவருடனும் மிக சகஜமாக பழகி,  எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். 

மேலும் ஒரு ஆச்சர்யமாக இசையமைப்பாளர் தமனின் மனைவி, அவருக்கே தெரியாமல் சர்ப்ரைஸாக நிகழ்ச்சியில் வந்து கலந்துகொண்டார். அப்போது யாரும் அறியாத, தமனின் பல பர்ஸனல் பக்கங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போதுதான், ஓய்வு நேரத்தில் தமன், நிகழ்ச்சித் தொகுப்பாளர் மாகாபாவுடன்  இணைந்து கிரிக்கெட் விளையாடும் செய்தியை பகிர்ந்தார். முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது நடந்து வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி, கலகலப்போடும் பல நெகிழ்ச்சி சம்பவங்கள் நிறைந்ததாகவும்,  அற்புதமானதாக நடந்து வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க,

Neeraj Chopra: ஈட்டி எறிதலில் உலக நாடுகளை மிரட்டும் நீரஜ் சோப்ரா; உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியுடன் ஒலிம்பிக்கிற்கும் தகுதி..

CM Breakfast Scheme: உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே... இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #ThankYouCMSir

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget