மேலும் அறிய

ARR meet Ilaiyaraaja: இசைப்புயலின் ஸ்டுடியோவில் இசை ஞானி...! அப்டேட் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்! குஷியில் ரசிகர்கள்!

ஒரு இசை நிகழ்ச்சிக்காக துபாயில் சென்றிருக்கும் இளையராஜா தனது இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஏ.ஆர் ரஹ்மானின்  ஃபிர்டோஸ் ஸ்டுடியோவுக்கு சென்றிருக்கிறார்

நாள்தோறும் ஏதாவது ஒரு புகைப்படமோ, வீடியோவோ, சம்பவமோ இணையதளத்தில் வைரலாவது வழக்கமாகிவிட்டது. அந்த வரிசையில், நேற்றிரவு முதல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது ஒரு புகைப்படம். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மானும், இசைஞானி இளையராஜாவும் சேர்ந்து எடுத்து கொண்ட அந்த புகைப்படம்தான் ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறது. 

இளையராகாவும், ஏ.ஆர் ரஹ்மானும் இந்திய சினிமாவின் இசை ஜாம்பவான்களாக திகழ்பவர்கள். தமிழ் மட்டுமின்றி வெவ்வேறு மொழி படங்களுக்கும் இசையமைத்திருக்கும் இவர்கள் சந்தித்து கொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது. துபாய் எக்ஸ்போ 2020 பிரமாண்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. உலகெங்கிலும் இருந்து முன்னணி கலைஞர்கள் துபாயில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் இருந்தும் பல முன்னணி கலைஞர்கள் துபாயில் நிகழ்ச்சி நடத்தி வரும் நிலையில், பெண் இசைக்கலைஞர்களை கொண்டு ஃபிர்டோஸ் ஸ்டுடியோ என்ற இசை குழுவை நடத்தி வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த குழுவோடு சேர்ந்து நிகழ்ச்சி நடத்தினார். துபாய் எக்ஸ்போவில் இளையராஜாவும் நிகழ்ச்சி நடத்தினார். இந்நிலையில், துபாயில் இருக்கும் இளையராஜா தனது இசை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு ஏ.ஆர் ரஹ்மானின்  ஃபிர்டோஸ் ஸ்டுடியோவுக்கு சென்றிருக்கிறார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஏ.ஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். “ஃபிர்டோஸ் ஸ்டுடியோவுக்கு மேஸ்ட்ரோவை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். ஃபிர்டோஸ் ஸ்டுடியோவிற்காக விரைவில் அவர் இசையமைப்பார் என எதிர்ப்பார்த்து இருக்கிறோம்” என தெரிவித்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஏ.ஆர் ரஹ்மானும், இளையராஜாவும் சேர்ந்து பணியாற்றினால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, நடிகை சர்தா ஸ்ரீநாத், பாடகி ப்ரியங்கா உள்ளிட்டோர் ரஹ்மானின் பதிவில் கமெண்ட் செய்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
CM Joseph Vijay: லஞ்சம் கொடுக்காதீங்கன்னு சொன்ன விஜய்.. இதான்யா வேணும் என பாராட்டிய சீனு ராமசாமி!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Embed widget