Sivakarthikeyan :சுதா கொங்கராவின் புறநாநூறு படத்தில் சிவகார்த்திகேயன்...தகவலை உறுதி செய்த ஜிவி பிரகாஷ்
சுதா கொங்கரா இயக்கவிருக்கும் புறநாநூறு திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதை இசையமைப்பாளர். ஜி.வி பிரகாஷ் உறுதிபடுத்தியுள்ளார்
புறநாநூறு
சூரரைப் போற்று படத்திற்கு பின் இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் சூர்யா இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்கவிருந்த படம் புறநாநூறு. இப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான், நஸ்ரியா நஸிம் , விஜய் வர்மா உள்ளிட்டவர்கள் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து பீரியட் டிராமாவாக உருவாக இருந்த இப்படம் சூர்யாவின் கால் ஷீட் காரணங்களால் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.
பின் இப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் துல்கர் சல்மான் , நஸ்ரியா நஸிம் உள்ளிட்டவர்களும் படத்தில் இருந்து விலகினர். சிலர் இப்படம் கைவிடப்பட்டதாக கூறினர். சிலர் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் படக்குழு சார்பாக எந்த வித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
சிவகார்த்திகேயன் 25
புறநாநூறு படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். இது இசையமைப்பாளராக அவருக்கு 100 ஆவது படம். சமீபத்தில் இப்படம் குறித்து பேசிய அவர் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதை உறுதி செய்துள்ளார். " புறநாநூறு ஒரு பெரிய பட்ஜெட் படமாக உருவாக இருக்கிறது. இது எனக்கு 100ஆவது படம். அதேபோல் இது ஒரு நடிகரின் 25 ஆவது படமாகவும் அமையலாம்" என்று கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே 23 படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அவர் ஒரு படவெங்கட் பிரபு படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக புறநாநூறு படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
GVPrakash confirms #Puranaanooru will be #Sivakarthikeyan's 25th film✅
— AmuthaBharathi (@CinemaWithAB) November 3, 2024
"Puranaanooru is now transforming as Big project. It's my 100th film. It's a 25th film of an actor. A big announcement will come soon❤️🔥"#Amaran - ARMurugadoss - SudhaKongara (SK🔥) pic.twitter.com/FLXFQfniNO
அமரன்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அமரன் திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. அமரன் திரைப்படம் முதல் மூன்று நாட்களில் 100 கோடி வரை உலகளவில் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது