Middle Class Review : முனிஷ்காந்த் விஜயலட்சுமி நடித்துள்ள 'மிடில் கிளாஸ்' படம் எப்டி இருக்கு...விமர்சனம் இதோ
Middle Class Movie Review : முனிஷ்காந்த் , விஜயலக்ஷ்மி இணைந்து நடித்துள்ள 'மிடில் கிளாஸ்' திரைப்பட விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்

கிஷோர் எம் ராமலிங்கம் இயக்கத்தில் முனிஷ்காந்த் , காளி வெங்கட் , விஜயலக்ஷ்மி அகத்தியன் மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடித்துள்ள படம் மிடில் கிளாஸ். இப்படம் நாளை நவம்பர் 21 ஆம் தேதி திரையங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை வழங்கி வருகிறார்கள். மிடில் கிளாஸ் படத்தைப் பற்றி விமர்சர்கர் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்
மிடில் கிளாஸ் திரைப்பட விமர்சனம்
மிடில் கிளாஸ் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை பேசும் விதமாக இந்த ஆண்டு சில படங்கள் வெளியாகி இருக்கின்றன. ராம் இயக்கிய பறந்து போ , சித்தார்த் நடித்த 3BHK , மெட்ராஸ் மேடினி ஆகிய படங்கள் குறிப்பிடத் தகுந்தவை. அந்த வகையில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் பிரச்சனைகளை மையமாக சிறிது மிகையான கற்பனை கலந்து உருவாகியுள்ள படம் மிடில் கிளாஸ். ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு ஒரு கோடி செக் கிடைத்தால், அது தொலைந்தால், என்ன நடக்கும் என்பதே படத்தின் கதை.
MIDDLE CLASS — First Half Review
— Let's X OTT GLOBAL (@LetsXOtt) November 19, 2025
Come up with a low expectations , but Munishkanth and Vijayalakshmi steal the show! Their chemistry and natural acting bring real middle-class emotions to life. 👏❤️
The story is deeply relatable, reflecting moments we’ve all lived at some… pic.twitter.com/vA5oUMQjOI
சிறிய பட்ஜெட்டில் உணர்ச்சிகரமாக பார்வையாளர்களுக்கு ஒரு அழகான மெசேஜை சொல்லியிருக்கிறது மிடில் கிளாஸ் திரைப்படம். முனிஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
#MiddleClass - Just Oustanding 👌🏻
— Thalapathy Siva (@Thalapathysiv08) November 20, 2025
Solid Performance from Munishkanth & Vijayalakshmi,IMO,Among the Low Budget film Released in 2025,This will be the Best Among that in Kollywood!! ❤️
Emotional Scenes Connected Very Well👌🏻
Writing was the Backbone 👏🏻👏🏻 #MiddleClassReview pic.twitter.com/NqSwVSazaS





















