Vinayagar Chaturthi 2023: அம்பானி வீட்டில் களைகட்டிய ‘விநாயகர் சதுர்த்தி’ .. பங்கேற்ற தமிழ் பிரபலங்கள் யார், யார் தெரியுமா?
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் இந்திய திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் இந்திய திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் கடந்த 2 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆவணி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை சதுர்த்தி திதி தான் விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் இந்த சதுர்த்தி திதி எந்த நாளில் வருகிறதோ அந்த நாளே விநாயகர் சதுர்த்தியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. நடப்பாண்டு புரட்டாசி மாதம் முதல் நாளில் மதியத்திற்கு மேல் இந்த திதி வந்ததால் செப்டம்பர் 18 ஆம் தேதி தென்னிந்தியாவில் கொண்டாடப்பட்டது.
அதேசமயம் சூரிய உதயத்தின் போது வரும் சதுர்த்தி திதி நாள் தான் விநாயகர் சதுர்த்தி என்பதால் நேற்று (செப்டம்பர் 19) விமரிசையாக கொண்டாடப்பட்டது. பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டனர். இப்படியான நிலையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானி ஆகியோரின் ஆன்ட்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பல துறை சார்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஷாரூக்கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, அலியா பட், இயக்குநர் அயன் முகர்ஜி, ஐஸ்வர்யா ராய், சல்மான் கான், கியாரா அத்வானி, சித்தார்த் மல்கோத்ரா, விக்கி கௌஷல், அஜய் தேவ்கன், ரோகித் ஷெட்டி, ஷ்ரத்தா கபூர், மௌனி ராய், திஷா பதானி, அனில் கபூர், ஹேமமாலினி, அனன்யா பாண்டே, ராஷ்மிகா மந்தனா, ரேகா, உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.
இதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல், தமிழ் சினிமா பிரபலங்களான இயக்குநர் அட்லி - நடிகை ப்ரியா, விக்னேஷ் சிவன் - நயன்தாரா உள்ளிட்டவர்கள் குடும்பத்தினரோடு கலந்து கொண்டனர். இதனால் விழா நடக்கும் இடமானது மேலும் களைக்கட்டியது. அனைவரும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையிலான உடைகள் அணிந்து வந்திருந்தனர். இதன் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது.
மேலும் படிக்க: Vijay Antony : வாழ்ந்து தான் பார்க்கலாமே... தற்கொலை மட்டுமே ஒரு தீர்வு அல்ல... நடிகை சுதாவின் வேதனையான கோரிக்கை