Narivetta X Review: சேரன் - டொவினோ தாமஸின் நரிவேட்டை! வேட்டை ஆடுவது மனதையா? பொறுமையையா?
Narivetta Twitter Review: சேரன், டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகியுள்ள நரிவேட்டை படத்தின் விமர்சனம் எப்படி உள்ளது என்பதை கீழே காணலாம்.

Narivetta Twitter Review: மலையாள திரையுலகின் பிரபல நடிகர் டொவினோ தாமஸ். இவருடன் சேரன், சூரஜ் வெஞ்சரமூடு, ஆர்யா சலீம், ப்ரியம்வதா கிருஷ்ணன், ரினி உதயகுமார், ஜிதின் ஈடன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் நரிவேட்டை. அனுராஜ் மனோகர் இயக்கியுள்ள இந்த படம் இன்று ரிலீசாகியுள்ளது.
நரிவேட்டை எப்படி இருக்கிறது?
மலையாளம் மற்றும் தமிழில் வெளியாகியுள்ள இந்த படமானது தங்களின் உரிமைகளுக்காக போராடும் மலைவாழ் மக்களும், அவர்களை ஒடுக்கும் காவல்துறையினருக்கும் நடுவில் நேர்மையாக இருக்கும் சாதாரண கான்ஸ்டபிளை மையப்படுத்தி பின்னப்பட்டுள்ள கதையாக அமைந்துள்ளது.
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிட்டியுள்ளது. எக்ஸ் தளத்தில் இந்த படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை கீழே காணலாம்.
ரமேஷ்பாலா தனது எக்ஸ் பக்கத்தில் புதியதாக பணியில் சேர்ந்துள்ள கான்ஸ்டபிள் தன் உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும், அதிகார கட்டமைப்பிற்கும் இடையே அதிகாரமற்ற மக்களுக்காக போராடும் போராட்டமே படம். டொவினோ தாமஸ் அற்புதமாக நடித்துள்ளார். சேரன் மூத்த காவல்துறை அதிகாரியாக சிறப்பாக நடித்துள்ளார். சூரஜ் கதாபாத்திரம் சிறிது நேரம் வந்தாலும் முக்கியமான கதாபாத்திரம் ஆகும். பார்ப்பதற்கு உகந்த படம் என்று பாராட்டியுள்ளார்.
#Narivettai [3.5/5] : A newly joined Police constable's fight against his superiors/system who exploit the powerless..
— Ramesh Bala (@rameshlaus) May 23, 2025
Drama.. Action.. Thriller.. @ttovino has given a fantastic performance.. @CheranDirector as Senior Police officer has done well.. #SurajVenjaramoodu has a… pic.twitter.com/LyzEhfsJ5A
மீனாட்சி சுந்தரம் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் ஆதிவாசி மக்களின் குரலாக, தவறான காவல்துறை அதிகாரிகளை கண்டிக்கும் பதிவாக மனசாட்சி உள்ள மக்களின் உணர்வாக அழுத்தமான படைப்பாக வந்த கதை. மாறுபட் கேரக்டரில் சேரன் நடிப்பு நச். டோவினோ, இயக்குனர், கதாசிரியரை, படக்குழுவினரை பாராட்டலாம். அந்த கலவரம், போலீஸ் நிலை, குழந்தை, பாதிக்கப்பட்டவர்களின் போராட்டம் மனதிற்குள் நிற்கும். இனி வயநாடு சென்றால் நரிவேட்டை நினைவில் வரும்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
அமுதபாரதி தனது எக்ஸ் பக்கத்தில், முதலாம் பாதி நன்றாக உள்ளது. இரண்டாம் பாதி உணர்வுப்பூர்வமாக உள்ளது. சேரன், டொவினோ தாமஸ், சூரஜ் வேம்பு கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காதல் காட்சிகள், பாடல்களை முதல் பாதியில் நீக்கியிருக்கலாம். இடைவேளைக்கு பிறகு திரைக்கதை சூடுபிடிக்கிறது. மொத்தமாக நல்ல உணர்வுப்பூர்வமான படம். இரண்டாம் பாதி பார்ப்பதற்கு தகுந்ததாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
#Narivetta/#Narivettai [#ABRatings - 3.5/5]
— AmuthaBharathi (@CinemaWithAB) May 23, 2025
- Decent First half and Good/Emotional second half✌️
- Neat characterization for TovinoThomas, Cheran & Suraj Venjaramoodu🌟
- Romantic portion & Song in First half could have been removed
- Last 30 mins towards Climax was the soul of… pic.twitter.com/5LZnfndVAF
ஸ்ரீதீத் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் மனதை உலுக்கும் உணர்வுப்பூர்வமான படம். முதல் பாதி ஓரளவு நன்றாக உள்ளது. இரண்டாம் பாதி அருமையாக உள்ளது. கிளைமேக்ஸ் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. டொவினோ தாமசுக்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். ஷமீர் முகமது எடிட்டிங் செய்துள்ளார். விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த வாரமே வெளியாக வேண்டிய இந்த படம் சில காரணங்களால் இன்று ரிலீசாகியுள்ளது. இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிட்டியுள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களில் மேலும் லாபத்தை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















