மேலும் அறிய

Movie Release This Week: ‛இந்த வாரம்... சினிமா வாரம்’ ரிலீசுக்கு வரிசைகட்டும் 8 படங்கள்!

ராக்கி, 83, தள்ளிப்போகாதே, ரைட்டர், ஷாம் சிங்க ராய், கலாட்டா கல்யாணம், மேட்ரிக்ஸ், மின்னல் முரளி என 8 படங்கள் இந்த வாரம் வெளியீடுக்காக காத்திருக்கின்றது.

2021ம் ஆண்டு இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. சினிமா துறையைப் பொருத்தவரை இந்த ஆண்டு பல ஏற்ற இறக்கங்களை கண்டுள்ளது. தியேட்டருக்கும், ஓடிடிக்குமான போரில் நிறைய படங்கள் பாதிக்கப்பட்டன. ஆனால், சினிமா ரசிகர்களின் ஆர்வம் மட்டும் குறையவேயில்லை. தியேட்டர், ஓடிடி என எந்த தளத்தில் வெளியானாலும், சினிமாவைக் கொண்டாட என ஒரு கூட்டம் எப்போதும் இருக்கின்றது. அந்த வரிசையில், டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை தினங்களையொட்டி வெளியீடுக்காக நிறைய படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர்.

எந்தெந்த படங்கள் எதில் ரிலீஸ் என்பது பற்றிய முழு விவரம் இதோ!

ராக்கி - தியேட்டர் ரிலீஸ் - டிசம்பர் 23

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த ரவி, பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ராக்கி. கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் கடந்தாண்டு வாங்கியது. கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக, படம் வெளியாகமல் இருந்த நிலையில், வரும் 23ஆம் தேதி படம் தியேட்டரில் வெளியாகிறது.

83 - தியேட்டர் ரிலீஸ் - டிசம்பர் 24

1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை வைத்து 83 படம் தயாராகி உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியான நிலையில், படம் வருகிற டிசம்பர் 24-ம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. 

ரைட்டர் - தியேட்டர் ரிலீஸ் - டிசம்பர் 24

பிரபல இயக்குநர் பா. ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் தயாரிப்பு  நிறுவனத்தின் அடுத்த திரைப்படமான ரைட்டர் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.  ஃப்ராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் பிரபல நடிகர் சமுத்திரக்கனி முன்னணி கதாபாத்திரம் நடித்து இப்படம் உருவாகியுள்ளது.  2003-ஆம் ஆண்டு வெளியான தனுஷின் திருடா திருடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான  சுப்ரமணியம் சிவா இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இப்படம் தியேட்டரில் வெளியாகிறது.

தள்ளிப் போகாதே - தியேட்டர் ரிலீஸ் - டிசம்பர் 24

கண்ணன் இயக்கத்தில், அதர்வா, அனுபமா பரமேஷ்வரன் ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படம்  தெலுங்கில் வெளியான ‘நின்னு கோரி’ திரைப்படத்தின் ரீமேக். டிசம்பர் முதல் வாரம் வெளியாக இருந்த இத்திரைப்படம் தேதி ஒத்திவைக்கப்பட்டு மாத இறுதியில் வெளியாக உள்ளது.

ஷாம் சிங்க ராய் - தியேட்டர் ரிலீஸ் - டிசம்பர் 24

தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் “ஷியாம் சிங்கா ராய்”.  Niharika Entertainment சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கியுள்ளார். மறுபிறவியை மையமாக கொண்டு, இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். சாய்பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளனர். 

கலாட்டா கல்யாணம் - டிஸ்னி+ஹாட்ஸ்டார் - டிசம்பர் 24

பாலிவுட்டின் பல முன்னணி நட்சத்திரங்களுடன் கூட்டணி அமைக்கும் தனுஷ் தற்போது அக்‌ஷய் குமார் , சாரா அலிகானுடன் இணைந்து அட்ராங்கி ரே என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழிலும் டப் செய்து ‘கலாட்டா கல்யாணம்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

மின்னல் முரளி - நெட்ப்ளிக்ஸ் - டிசம்பர் 24

மலையாள சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படம் . டொவினோ தமாஸின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது. மின்னல் முரளி என்னும் திரைப்படம் மலையாள சினிமா கணாத மாறுபட்ட ஃபேண்டஸி கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் தான் மின்னல் முரளியாகவே வாழ்ந்திருப்பதாக கூறியிருக்கிறார் டொவினோ தாமஸ். இப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளியாகவுள்ளது.

தி மேட்ரிக்ஸ் ரிச்சரெக்‌ஷன்- டிசம்பர் 22ம் தேதி தியேட்டரில் வெளியாகிவிட்டது

லானா வெச்சவுஸ்கி இயக்கத்தில் வெளியாக இருக்கும் இப்படத்திற்கு முன்பு, மேட்ரிக்ஸ் ட்ரையாலஜியாக மூன்று திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. பிரபல நடிகர் கேனுரீவ்ஸ் நடித்திருக்கும் இத்திரைப்படம் டிசம்பர் 22ம் தேதி வெளியாகிவிட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
BCCI: மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..?  ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..? ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
TN Rain Alert: அடுத்த 5 நாட்கள் கவனமாக இருங்க.. தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா?
அடுத்த 5 நாட்கள் கவனமாக இருங்க.. தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா?
தஞ்சாவூர் மாநகராட்சி : 3-ஆம் சனிக்கிழமை தொற்றாநோய்கள் சிறப்பு மருத்துவமுகாம்
தஞ்சாவூர் மாநகராட்சி : 3-ஆம் சனிக்கிழமை தொற்றாநோய்கள் சிறப்பு மருத்துவமுகாம்
Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Embed widget