Mothers Day Songs: அன்னையர் தின ஸ்பெஷல் - அம்மாவைக் கொண்டாடும் டாப் 5 சினிமாப் பாடல்கள்!
தமிழ் சினிமாவின் தலைசிறந்த அம்மா பாடல்களில் சில...
இன்று மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு, உலகம் முழுவதும் உள்ள அம்மாக்களைக் கொண்டாடும் விதமாக அன்னையர் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள அம்மாக்களை பெருமைப்படுத்தும் விதமாக "அன்னையர் தினம்" கொண்டாடப்படுகிறது.
பலரும், அவர்களது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து தங்களது வாழ்த்தினையும் நன்றியினையும் தெரிவித்து வருகின்றனர். பலர் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டா என கிடைக்கும் சோஷியல் மீடியா தளங்கள் அனைத்தும் அம்மா புகழாரம் ஓடிக்கொண்டிருக்கும். குறிப்பாக தமிழ் சினிமாவின் உணர்ச்சி மிக்க அம்மா பாடல்கள் இன்றுதான் ஓவர்டைம்மாக உலா வரும்.. அப்படி ஸ்டேடஸ் வைப்பவர்களுக்கு உதவியாக சில தேர்ந்தெடுத்த அம்மா பாடல்களை இங்கே தொகுத்துள்ளோம்.
1. தாயில்லாமல் நானில்லை - அடிமைப்பெண்
அடிமைப்பெண் திரைப்படத்தில் வரும் தாயில்லாமல் நானில்லை பாடல் ஆல் டைம் வைப். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் டி.எம்.சௌந்திரராஜன் பாடிய இந்தப் பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் லூப்பில் கேட்டுக் கொண்டிருக்கலாம்.
2. நானாக நானில்லை தாயே - தூங்காதே தம்பி தூங்காதே ட்யூல் ரோல் கமல்ஹாசனுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பின்னனிக் குரலாகப் பாடிய பாடல்.நடிகர் சந்தியா அம்மாவாக நடித்திருப்பார். இளையராஜா இசையில் அத்தனை மென்மையாக வருடும் இந்தப் பாடல்.
3. ஆசைப்பட்ட எல்லாத்தையும் - வியாபாரி வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா -சீதா நடிப்பில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும். இசை தேவா பாடியவர்கள் ஹரிஹரன், கார்த்திகேயன். இசையில் Crooning என்கிற சொல்லாடல் உண்டு. இந்தப் பாடல் அந்த வகையறா.
4. அம்மா அம்மா நீ எங்க அம்மா - வேலையில்லா பட்டதாரி தனுஷ் - சரண்யா நடிப்பில் உருவான இந்தப் பாடலைப் பாடியவர்கள் தனுஷ் - எஸ்.ஜானகி இதற்குப் பின்னணி இசை அனிருத்.
5. உயிரும் நீயே - பவித்ரா பாடகர் உன்னிகிருஷணன் பாடி அஜித்- ராதிகா நடிப்பில் உருவான பவித்ரா திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும். ஏ.ஆர்.ரஹ்மான இதற்கு இசையமைத்துள்ளார்.