மேலும் அறிய

அதிகம் விரும்பப்படும் சின்னத்திரை நடிகர்கள்! 10வது இடத்தில் சஞ்சீவி - டாப் 10 லிஸ்ட்!

சின்னத்திரை ரசிகர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில் தற்போது இணையத்தில் இந்த லிஸ்ட் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இரண்டு வருடங்களாக மக்களின் இயல்பு வாழ்கைகையை புரட்டிப் போட்டுள்ளது. கொரோனாவால் பல்வேறு துறைகளும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இதில் சினிமா துறையையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நடப்பதிலேயே, கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள காரணங்களால் பெரும் சவால்களை உலக அளவில் சினிமா துறை சந்தித்து வருகின்றது.

இந்த சவால்களை முறியடித்து வெற்றிக்கரமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டாலும், திரையரங்கிளில் வெளியிடுவதில் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சமாளிக்க அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓ.டி.டி தளங்களில் திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் பெரும் பொருட்செலவில், மாஸ் ஹீரோக்கள் நடித்த திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடப்படுவதையே பெரும்பாலும் விரும்பப்படுகிறது. கொரோனா பரவல் சற்று ஓய்ந்த நிலையில் 2022-ம் ஆண்டு துவக்கத்திலேயே பல்வேறு திரைப்படங்கள் வெளியாக இருந்ததால், இந்திய திரைப்பட உலகம் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தது. ஆனால் ஒமைக்ரான் என்ற உருமாற்றம் பெற்ற கொரோனா பரவலால், மீண்டும் கடும் கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு காரணமாக இந்தியாவில் திரைப்படங்கள் வெளியாவதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது.

அதிகம் விரும்பப்படும் சின்னத்திரை நடிகர்கள்! 10வது இடத்தில் சஞ்சீவி -  டாப் 10 லிஸ்ட்!

ஆனால் சின்னத்திரையில் அவ்வளவு பாதிப்பு இல்லை, சில மாதங்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை என்றாலும் உடனே அடுத்தகட்ட வேலைகள் தொடங்கின. இப்போது படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் படு சூடாக நடந்து வந்தது, புத்தம் புதிய தொடர்களும் வந்தன. இந்த நேரத்தில் தான் சமூக வலைதளங்களில் சின்னத்திரை நடிகர்கள் குறித்து ஒரு லிஸ்ட் வைரலாக பரவி வருகிறது. மக்களிடையே அதிக மவுசு கொண்டு சின்னத்திரை நடிகர்கள் யார் யார் என்ற விவரம் தான். சின்னத்திரை ரசிகர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில் தற்போது இணையத்தில் இந்த லிஸ்ட் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது.

இதில் ரசிகைகளின் பிடித்தமான கதாநாயகன் வரிசையில் முதலிடத்தை ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சத்யா சீரியலின் கதாநாயகன் விஷ்ணு பிடித்துள்ளார். இந்த சீரியலில் அமுல் பேபி என்று செல்லமாக அழைக்கப்படும் விஷ்ணு தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றார்போல் கச்சிதமாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். இவரைத் தொடர்ந்து இரண்டாமிடத்தை ரொமான்டிக் ஹீரோவாக சன் டிவியின் ரோஜா சீரியலில் வலம்வரும் சிப்பு சூர்யன் பிடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து மூன்றாம் இடம் ஜீ தமிழில் அன்பே சிவம் சீரியலின் கதாநாயகன் விக்ரம் ஸ்ரீக்கு கிடைத்துள்ளது. அதைப்போல் நான்காமிடம் செம்பருத்தி சீரியலின் கதாநாயகன் விஜே அக்னிக்கும், ஐந்தாமிடம் சின்னத்திரையில் கதாநாயகனாக பல ஆண்டுகளாகத் தன்னுடைய இருப்பை தக்கவைத்துக் கொண்ட ஸ்ரீ குமாருக்கு கிடைத்துள்ளது.

அதிகம் விரும்பப்படும் சின்னத்திரை நடிகர்கள்! 10வது இடத்தில் சஞ்சீவி -  டாப் 10 லிஸ்ட்!

மேலும் ஆறாம் இடம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை என்ற விருவிருப்பான சீரியலின் கதாநாயகன் நந்தாவிற்கு கிடைத்துள்ளது. அத்துடன் 7-வது இடம் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமடைந்த மிர்ச்சி செந்தில் பெற்றுள்ளார். இவர் தற்போது விஜய் டிவியில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். 8-வது இடம் ராஜா ராணி சீரியலின் கதாநாயகன் சிந்துக்கு கிடைத்துள்ளது. இவர் சமீபத்தில் தன்னுடன் நடித்த சீரியல் கதாநாயகி ஸ்ரேயா அஞ்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். 9-வது இடம் சன்டிவியின் சித்தி2 சீரியல் கதாநாயகன் நந்தன் லோகநாதனுக்கும், 10-வது இடம் கயல் சீரியலின் கதாநாயகன் சஞ்சீவிக்கு கிடைத்துள்ளது.

டாப் 10 லிஸ்ட்:

  1. விஷ்ணு (சத்யா)
  2. சிப்பு சூர்யன் (ரோஜா)
  3. விக்ரம் ஸ்ரீ (அன்பே சிவம்)
  4. அக்னி (செம்பருத்தி)
  5. ஸ்ரீகுமார் (வானத்தைப் போல)
  6. நந்தா (கோகுலத்தில் சீதை)
  7. செந்தில் (சரவணன்-மீனாட்சி)
  8. சித்து (ராஜா ராணி 2)
  9. நந்தன் (சித்தி2)
  10. சஞ்சீவ் (கயல்)
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget