மேலும் அறிய

Skoda Slavia: ஸ்கோடா ஸ்லாவியா சோபிக்காதது ஏன்? என்ன இல்லை? போட்டி எஸ்யுவிக்கள் அடித்து நொறுக்கியது எப்படி?

Skoda Slavia Competitors: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடா ஸ்லாவியா விற்பனையில் அசத்த முடியாமல் போனதற்கு காரணமான, 5 போட்டி கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Skoda Slavia Competitors: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடா ஸ்லாவியா கார் மாடலுக்கு கடும் போட்டி அளிக்கும் 5 மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஸ்லாவியா - இவ்ளோ இருந்தும் விற்பனை இல்லையே?

இந்திய சந்தையில் கிடைக்கும் ப்ரீமியம் மிட்-சைஸ் செடானான ஸ்கோடா ஸ்லாவியா, சர்வதேச பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. க்ரோம் சரவுண்டுடன் கூடிய ஹெக்சகனல் க்ரில், க்ரிஸ்டலைன் எல்இடி முகப்பு விளக்குகள், எல்-வடிவிலான பகல்நேரங்களில் ஒளிரும் விளக்குகள் ஆகியவை செடான் பிரிவில் ஸ்லாவியாவை தனித்துவமானதாக மாற்றுகிறது.  இதன் விலை வரம்பானது ரூ.9.99 லட்சம் தொடங்கி ரூ. 17.99 லட்சம் வரை நீள்கிறது. 10 லட்சத்தும் குறைவான பட்ஜெட்டில் பல்வேறு மேம்பட்ட அம்சங்களை கொண்டிருந்தாலும், விற்பனையில் ஸ்லாவியாவால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. மாதாந்திர விற்பனை எண்ணிக்கை சுமார் ஆயிரத்து 600 யூனிட்கள் என்ற நிலையிலேயே உள்ளது.

ஸ்கோடா ஸ்லாவியாவில் என்ன பிரச்னை?

1.0 லிட்டர் TSI (115 PS, 178 Nm) மற்றும் 1.5 லிட்டர் TSI (150 PS, 250 Nm) என இரண்டு டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின்களை கொண்டுள்ளது. இரண்டுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. அதிகபட்சமாக சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் அளிப்பதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர்.

Skoda Slavia: ஸ்கோடா ஸ்லாவியா சோபிக்காதது ஏன்? என்ன இல்லை? போட்டி எஸ்யுவிக்கள் அடித்து நொறுக்கியது எப்படி?

ஆனால், தீவிரமான எஸ்யுவிக்களின் ஆதிக்கம், செடான் பிரிவில் ப்ரீமியம் விலை நிர்ணயம், குவாலிட்டி கன்ட்ரோல் சிக்கல் ஆகியவை ஸ்லாவியாவின் பிரச்னைகளாக உள்ளன. ஏசி கூலிங், அதிகப்படியான சத்தம், DSG கியர்பாக்ஸ் அதிர்வுகள் ஆகிய பிரச்னைகள் இருப்பதாக பயனர்கள் தெரிவிப்பதோடு, கடந்த ஆண்டு சீட் பெல்ட் பிரச்னை காரணமாக ஸ்லாவியா திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களில், மைலேஜும் பாராட்டுதலுக்குரிய வகையில் இல்லையாம். அதேநேரம், இந்த காருக்கு போட்டியாக சில மாடல்கள் உள்ளூரில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதன் காரணமாகவும் ஸ்லாவியாவால் இந்த ப்ரீமியம் செடான் பிரிவில் ஆதிக்கம் செலுத்த முடியாமல் தள்ளாடி வருகிறது.

ஸ்லாவியாவை அடித்து நொறுக்கும் போட்டியாளர்கள்..

இந்திய சந்தையில் ஸ்லாவியாவிற்கு நேரடியாக போட்டியாளராக ஃபோக்ஸ்வாகன் விர்டஸ், ஹுண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி மற்றும் டாடா கர்வ் ஆகிய மாடல்கள் விளங்குகின்றன.

1. ஃபோக்ஸ்வாகன் விர்டஸ்

ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் மற்றும் ஸ்கோடாவின் ஸ்லாவியா ஆகிய இரண்டு மாடல்களும் ஒரெ ப்ளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விர்டஸ் ஆனது 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை 6-ஸ்பீடுமேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன் உடனும்,  1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜினை 7-ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் ஆப்ஷனுடம் கொண்டுள்ளது. 1.0-லிட்டர் இன்ஜின் 113.99 hp பவரையும் 178 Nm டார்க்கையும் வழங்குகிறது, அதே சமயம் 1.5-லிட்டர் இன்ஜின் 147.51 hp பவரையும் 250 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. அடிப்படை Comfortline 1.0 TSI MT மாடலின் விலை ரூ. 10.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். ஒரே மாதிரியான தளத்தில் உருவாக்கப்பட்டாலும், கூடுதலான ஸ்போர்ட்டியர் தோற்றம், சிறந்த அதிவேக நிலைத்தன்மைக்காக சற்றே கடினமான சஸ்பென்ஷன் மற்றும் மேம்பட்ட வசதிகளுடன் கூடிய அடிப்படை வேரியண்ட்கள் மூலம் விர்டஸ் ஆனது ஸ்லாவியைவிட சிறந்ததாக உள்ளது.

Skoda Slavia: ஸ்கோடா ஸ்லாவியா சோபிக்காதது ஏன்? என்ன இல்லை? போட்டி எஸ்யுவிக்கள் அடித்து நொறுக்கியது எப்படி?

2. ஹுண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா கார் மாடலானது ரூ. 10.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற தொடக்க விலையை கொண்டுள்ளது. 1.5-லிட்டர் நேச்சுரலி-ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளடு. டர்போ பெட்ரோல் ஆப்ஷன் அதிகபட்சமாக 157.57 hp பவரையும், 253 Nm உச்சபட்ச டார்க்கையும் வழங்குகிறது. ஹூண்டாய் வெர்னா டர்போ, அதன் சிறந்த ஆற்றல்-எடை விகிதம், வேகமான ஆக்சிலரேஷன் மற்றும் DCT கியர்பாக்ஸின் சிறப்பான செயல்திறன் ஆகியவற்றின் மூலம் ஸ்கோடா ஸ்லாவியாவை (1.5 TSI) விட சிறந்ததாக உள்ளது.

Skoda Slavia: ஸ்கோடா ஸ்லாவியா சோபிக்காதது ஏன்? என்ன இல்லை? போட்டி எஸ்யுவிக்கள் அடித்து நொறுக்கியது எப்படி?

3. ஹோண்டா சிட்டி

ஸ்லாவியா போட்டியாளர்களுக்கான பட்டியலில் ஹோண்டாவின் சிட்டி கார் மாடலும் இடம்பெற்றுள்ளது. இதன் தொடக்க விலை ரூ. 11.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். 1.5-லிட்டர், வாட்டர்-கூல்டு பெட்ரோல் இன்ஜின் மூலம், இந்த பிரபலமான செடான் ஆனது 119 hp பவரையும், 145 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.  6-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் CVT ஆப்ஷன்களை பயனர்கள் தேர்வு செய்யலாம். அதிகப்படியான எரிபொருள் செயல்திறன், நகர்ப்புற பயன்பாட்டில் மென்மையான CVT ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் அதிகப்படியான நம்பகத்தன்மை மூலம் ஸ்லாவியை விட சிறந்த தேர்வாக ஹோண்டாவின் சிட்டி விளங்குகிறது.

Skoda Slavia: ஸ்கோடா ஸ்லாவியா சோபிக்காதது ஏன்? என்ன இல்லை? போட்டி எஸ்யுவிக்கள் அடித்து நொறுக்கியது எப்படி?

4. டாடா கர்வ்

டாடா மோட்டார்ஸின் கூபே-ஸ்டைல் ​​எஸ்யூவி ஆன கர்வ் மாடலின் தொடக்க விலை சுமார் ரூ. 9.66 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். பாதுகாப்பு பரிசோதனையில் இந்த காரானது 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதில் 1.5-லிட்டர் டீசல் மற்றும் இரண்டு 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கள் இடம்பெற்றுள்ளன. இதன் ஹைபிரியன் பெட்ரோல் மாடலில், அதிகபட்சமாக 123 hp ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. எஸ்யுவி கூபே டிசைன், அதிகப்படியான க்ரவுண்ட் க்ளியரன்ஸ், தீவிரமான தொழில்நுட்பங்கள் நிறைந்த கேபின், அதிகப்படியான எரிபொருள் ஆப்ஷன் ஆகியவற்றின் மூலம் டாடா கர்வ், ஸ்லாவியாவிற்கு கடும் போட்டியாளராக திகழ்கிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!

Embed widget