மேலும் அறிய

Malaikottai Valiban : க்ளாசிக் லுக்கில் மோகன்லால்; மலைக்கோட்டை வாலிபன் படத்தின் டீசர் வெளியீடு எப்போது தெரியுமா?

Malaikottai Valiban : ’மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தின் டீசர் ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலையாள திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லான் ’மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தில் இரண்டு வெவ்வேறு வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

’மலைக்கோட்டை வாலிபன்’ திரைப்படம் மலையாள ஆக்‌ஷன் ஸ்டார் மோகன்லால், நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரி (Lijo Jose Pellissery) இருவரும் இணைந்து ஹிட் ப்ராஜக்ட் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தப் படத்தில் மோகன்லால் புதிய கதைகளத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மலையால சினிமா உலகின் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் மிரட்டும் சினிமா அனுபவத்தை வழங்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மோகன்லால் இளம் தயாரிப்பாளருடன், இதுவரை நடிக்காத, புதிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கென பல மெனக்கடல்களை மேற்கொண்டுள்ளார்.லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மலையாள சினிமாவில் புதிய திரைமொழியை உருவாக்கியவர்.இவர் மோகன்லால் போன்ற நடிகருடன் இணைந்து எடுக்கும் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு திரை ஆர்வலர்கள், ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

மலைக்கோட்டை வாலிபன்  

‘நண்பகல் நேரத்து மயக்கம்’,‘ஜல்லிக்கட்டு’,‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’ உள்ளிட்ட மலையாள படங்கள் மூலமாக வித்தியாசமான கதைகளால் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.இவர் இயக்கும் மலைக்கோட்டை வாலிபன் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18-ம் தேதி ராஜஸ்தானில் தொடங்கியது. இந்தத் திரைப்படம் ஒரு ஸ்போட்ஸ் த்ரில்லர் என்று கூறப்பட்டது. இதில் மோகன்லால், பிரிட்டிஷ் இந்தியாவின் பிரபல மல்யுத்த வீரரான ’தி கிரேட் காமா’ காதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால், இதில் உண்மையில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் ஹிபு மறுத்திருந்தார். இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.மேலும், இந்த திரைப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தத் திரைப்படம் ஆக்‌ஷன் த்ரில்லர் என்றும், இதில் பல திறாமையான நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றன. இதில் உலக நாயகன் கமல்ஹாசன் மோகன்லாலுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, தமிழ் நடிகர் ஜீவா, சோனாலி குல்கர்னி, ஹரிஷ் பெராடி, டேனிஷ் சைத், மணிகண்டன் ஆர் அசாரி, கதா நந்தி, ஹரிபிரசாத் வர்மா உள்ளிட்டவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மோகன் லால் லுக்

விளையாட்டை அடிப்படையாக கொண்ட கதை என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் மோகன்லால் கதைக்கு ஏற்றார்போல நடிக்க வேண்டும் என்று தனது லுக்கை மாற்றி கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பாக்ஸிங் வீரராக மோகன்லால் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியது. அப்படி என்றால், கட்டுக்கோப்பான இளைஞனாக, விளையாட்டு வீரராக மோகன் லால் நடிக்கலாம் என்றும், அதோடு மட்டுமல்லாமல், மற்றொரு தோற்றத்திற்காக மோகன்லால் எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தில் மோகன்லால் தாடி லுக்கிற்கு குட்பை சொல்லவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மலைக்கோட்டை வாலிபன் டீசர் ரிலீஸ்:

இந்தப் படத்தின் ஹீட்டிங்க் உள்ளிட்ட தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், ஏப்ரல் மாதம் டீசர் வெளியாகும் என்று இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி-ன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல்-14 ஆம் தேதி மலையாள புத்தாண்டாக ‘விஷ்ணு’ கொண்டாடப்படும் நாளில் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தின் டீசர் வெளியாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
Annamalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
Annamalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
ABP Premium

வீடியோ

காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out
”தாய் மதத்துக்கு திரும்பு”கொந்தளிக்கும் பாஜகவினர்!AR ரஹ்மான் சர்ச்சை பின்னணி?
19 பீர் பாட்டில்கள்... நண்பர்களின் விபரீத போட்டி! பறிபோன உயிர்கள்
வீடியோ எடுத்த பெண் மீது CASE! முந்தைய இரவு நடந்தது என்ன? தீபக்கின் நண்பர் பகீர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
Annamalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
Annamalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
Toyota Ebella EV: 3 ட்ரிம்கள், 2 பேட்டரி ஆப்ஷன்கள், டொயோட்டாவின் முதல் மின்சார கார் - எபெல்லா விலை, ரேஞ்ச்?
Toyota Ebella EV: 3 ட்ரிம்கள், 2 பேட்டரி ஆப்ஷன்கள், டொயோட்டாவின் முதல் மின்சார கார் - எபெல்லா விலை, ரேஞ்ச்?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களம்; தொடங்கிய சத்துணவு ஊழியர்கள் போராட்டம்- தீர்வு காணுமா அரசு
ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களம்; தொடங்கிய சத்துணவு ஊழியர்கள் போராட்டம்- தீர்வு காணுமா அரசு
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
Embed widget