மேலும் அறிய

Mohan | haraa | ஆக்‌ஷன் ஹீரோ ! டோன் பிசிக் ! - 13 ஆண்டுகளுக்கு பிறகு தரமாக கம் பேக் கொடுக்கும் மைக் மோகன் !

மேலும் படத்தில் 80 களில் வலம் வந்த மென்மையான மோகனை ஃபிளாஷ்பேக் காட்சியில் காட்ட முயற்சி எடுத்துள்ளார்களாம் படக்குழு

80 களில் வாழ்ந்த இளசுகளின் மனதை கொள்ளைக்கொண்டவர் நடிகர் மோகன். அப்போது வெளியான மோகனின் திரைப்படங்கள் பல வெள்ளி விழாக்களை கண்டது. அதனாலேயே இவர் வெள்ளி விழா நாயகன் என அழைக்கப்பட்டார். என்னதான் மோகன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும் , அவரின் குரலுக்கென தனி ரசிகர்கள் இருந்தனர். மோகனுக்கு குரல் கொடுத்தவர் பின்னணி பாடகர் சுரேந்தர். இருவர்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகள் சினிமா ரசிகர்கள் அறிந்ததே. சிறிது காலம் சொந்த குரலில் நடித்து வந்தார் மோகன். 90 களுக்கு பிறகு மோகனின் மார்கெட் மெல்ல மெல்ல சரிய தொடங்கியது. அவ்வபோது அவர் சொந்தமான படைப்புகள் மூலம் தலைக்காட்டினாலும் இக்காலத்து ரசிகர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு ஹரா என்னும் திரைப்படம் மூலமாக மீண்டும் திரைத்துறையில் காலடி எடுத்து வைக்கிறார் மோகன். இந்த திரைப்படத்தை  விஜய் ஸ்ரீ  ஜி இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. படத்தில் நடிக்க பிரபல இயக்குநர்கள் மற்றும் அறிமுக இயக்குநர்கள் என அனைவரும் தன்னை அணுகிய போதும் அதில் நான் எதிர்பார்த்த உள்ளுணர்வு இல்லை என்கிறார் மோகன். ஆனால் விஜய் ஸ்ரீ ஜி எனது தேவையை பூர்த்தி செய்வார் என தான் நம்புவதாக கூறுகிறார் மோகன். ஹரா திரைப்படத்தில் மோகன் ஆக்‌ஷன் நாயகனாக நடிக்கவுள்ளாராம். கதை அப்பா மகளுக்கு இடையேயான உறவு பிணைப்பை சொல்லுவதாக அமையும். குழந்தைகளுக்கு பள்ளி முதலே இந்தியச் சட்டத்தை அறிமுகப்படுத்துவது அவசியம்  என்பதையும் படம் வலியுறுத்தும் என்கிறார் விஜய். சிவபெருமானின் திருநாமங்களில் ஒன்றான ஹரா (தீமையை அழிப்பவர்)என்ற தலைப்பை வைத்திருக்கிறார்களாம்.

தற்போது படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.


மேலும் படத்தில் 80 களில் வலம் வந்த மென்மையான மோகனை ஃபிளாஷ்பேக் காட்சியில் காட்ட முயற்சி எடுத்துள்ளார்களாம் படக்குழு. படத்தில் தாடியுடன் கட்டுக்கோப்பான உடலமைப்புடன் வலம் வர இருக்கிறாராம் மோகன். அதற்கான உடற்பயிற்சியில் மோகன் தற்போது ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கிறார் இயக்குநர்.பிப்ரவரியில் ஹரா படப்பிடிப்பு தொடங்கவுள்ளது, முக்கியமாக கோயம்புத்தூர் மற்றும் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் படம் துவங்கவுள்ளது. இது தவிர சென்னையில் சில பகுதிகளில் செட் அமைத்தும் படமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் தேதி வெளியான படத்தின் அறிவிப்பிற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அதற்கு நான் நன்றியுள்ளவனாக உணர்கிறேன் என நடிகர் மோகன் தெரிவிக்கிறார்.

 

தலைப்பு செய்திகள்

”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
”ரசிகர் மன்றங்களை தொடங்கி வேடிக்கை பொருளாக மாறாதீர்கள்”...யாரை குறிவைத்து பேசினார் மிஷ்கின்...
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
Indian 3 : ரிலீஸூக்கு தயாராகும் இந்தியன் 3...லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் அறிவிப்பு
சாரி தல குடும்பத்த பாக்கனும்...ஆதரவு கேட்ட அஜித்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரகளையான ரிப்ளை
சாரி தல குடும்பத்த பாக்கனும்...ஆதரவு கேட்ட அஜித்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரகளையான ரிப்ளை
ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?
ஜெயிலர் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதும் அந்த சின்ன பட்ஜெட் படம்...யார் அந்த தைரியசாலி?

வீடியோ

ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Seeman: கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
கடற்கரையைப் பாதுகாக்க மக்களுக்கு ஒரு சட்டம், அரசுக்கு வேறு சட்டமா? - பொங்கி எழுந்த சீமான்
Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
சென்னை விமான நிலையத்திற்கு அப்க்ரேட் வருமா? வராதா? 2வது கட்ட ஆய்வு - 8 மாதம், உயரடுக்கு மேம்பாலம்
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
Tata EV Discount: கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
கொளுத்துங்க பட்டாச..! தீபாவளிக்காக ரூ.3.35 லட்சம் வரை தள்ளுபடி - டாடாவின் எந்தெந்த கார்களுக்கு?
Embed widget