Tom Cruise: ‘ரிஸ்க் எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி’.. அந்தரத்தில் பறந்த டாம் குரூஸ்.. வைரலாகும் வீடியோ!
மிஷன் இம்பாசிபிள் 7 டெட் ரெக்கனிங் படப்பிடிப்பில் இருக்கும் டாம் குரூஸ் விமானத்தில் இருந்து கீழே குதிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஹாலிவுட் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகரான டாம் குரூஸ் ஏராளமான ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாக இருந்து வருகிறார். அடுத்தடுத்து அதிரடியான ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து வரும் இவரின் நடிப்பில், அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் மிஷன் இம்பாசிபிள் 7. இப்படத்தின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
மிஷன் இம்பாசிபிள் அடுத்த சீரிஸ் :
ஹாலிவுட் திரைப்படங்களில் மிஷன் இம்பாசிபிள் சீரிஸ் மீது ரசிகர்களுக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. கடைசியாக 2018ம் ஆண்டு வெளியான இப்படத்தின் சீரிஸை தொடர்ந்து 7வது சீரிஸ் தயாராகி வருகிறது. இப்படத்தின் டெட் ரெக்கனிங் முதல் பாகம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இப்படத்தின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
View this post on Instagram
விமானத்தில் இருந்து குதிக்கும் டாம் குரூஸ்:
இது குறித்து டாம் குரூஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் 'டாப் கன்: மேவரிக் படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. தற்போது நாங்கள் தென்னாப்பிரிக்காவின் மேல் பறந்து கொண்டு இருக்கிறோம். 'மிஷன்: இம்பாசிபிள் - டெட் ரெக்கனிங் ஒன்று மற்றும் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை நடத்தி கொண்டு இருக்கிறோம்.” என்று பேசி சிரித்தபடியே குரூஸ் விமானத்தில் இருந்து கீழே குதிக்கிறார்.
All the action, all the missions, all the Tom. 💥 Make it a Mission: Impossible holiday with all six movies on 4K UHD & Digital: https://t.co/f1O5NMyO67 pic.twitter.com/DvdKAlZUtT
— Mission: Impossible (@MissionFilm) December 16, 2022
எப்போதும் போல் உங்களை மகிழ்விக்க என்னை அனுமதித்ததற்கு நன்றி. உங்களை திரையரங்கத்தில் ஆச்சரியப்படுத்தாமல் விடப்போவதில்லை. மீண்டும் உங்களை திரையரங்கத்தில் சந்திப்போம்" என்று அதில் அவர் பேசி இருக்கிறார்.