Katrina kaif: தமிழில் நடிக்க கஷ்டமாக இருந்தது - கத்ரீனா சொல்வதை பாருங்க!
ஸ்டார் என்றால் நடிக்கத் தேவையில்லையா என்று மெரி கிறிஸ்துமஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி கேட்டுள்ளார்
மெரி கிறிஸ்துமஸ்
ஸ்ரீராம் ராகவண் இயக்கத்தில் விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப் நடித்து உருவாகி இருக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் எடுக்கப் பட்டிருக்கும் இந்தப் படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ராதிகா ஆப்தே, ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி, மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். மெரி கிறிஸ்துமஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நடிகை கத்ரீனா கைஃப் மற்று விஜய் சேதுபதி படத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார்கள்.
View this post on Instagram
தமிழில் நடிக்க கஷ்டமாக இருந்தது
நடிகை கத்ரீனா கைஃப் பேசியபோது “ஸ்ரீராம் ராகவனின் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எப்போதும் என்னுடைய நீண்ட நாள் ஆசையாக இருந்து வருகிறது. இந்தப் படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னபோது உடனே சம்மதித்து விட்டேன் . ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் எடுக்கப் பட்டதால் எனக்கு இது கொஞ்சம் சவாலான ஒரு அனுபவமாக இருந்தது. மேலும் நான் தமிழ் மொழிக்கு புதியவள் என்பதால் தமிழ் பிரதியில் நடிப்பது எனக்கு கொஞ்சம் சிரமமான ஒரு அனுபவமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.
ஸ்டார் நடிக்க கூடாதா ?
நடிகர் விஜய் சேதுபதி ஒரு ஸ்டார் இல்லை அவர் ஒரு நடிகர் என்று மெரி கிறிஸ்துமஸ் படத்தின் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் தெரிவித்திருந்தார். இதனைக் குறிப்பிட்டு அவரிடம் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்கள் நீங்கள் ஒரு நடிகராக இருக்க விரும்பி மிகப்பெரிய ஸ்டாராக இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்கள். இதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி தனக்கு இதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை என்றும் எல்லா நடிகர்களும் கதைசொல்லும் இயக்குநர்களுக்கு உதவ நினைக்கிறார்கள். ஒரு கதையின் ஒரு அங்கமாக இருக்க நினைப்பவர்கள் நடிகர்கள் . ஸ்டார் என்றால் நடிக்கத் தேவை இல்லையா என்று அவர் கேட்டுள்ளார்