Kuiko Movie: ”பாராட்டு மழையில் குய்கோ படம்” .. ரசிகர்களிடம் கவர்ந்த யோகிபாபு, விதார்த் கூட்டணி..
நடிகர்கள் யோகி பாபு மற்றும் விதார்த் நடித்துள்ள “குய்கோ” படம் பத்திரிக்கையாளர்களின் பாராட்டு மழையை பெற்றுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நடிகர்கள் யோகி பாபு மற்றும் விதார்த் நடித்துள்ள “குய்கோ” படம் பத்திரிக்கையாளர்களின் பாராட்டு மழையை பெற்றுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் படங்களை காட்டிலும் புதிய இயக்குநர்கள் அல்லது பிரபலமான நட்சத்திரங்கள் தேர்வு செய்யும் குறைந்த பட்ஜெட் படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் நேற்று நடிகர் யோகிபாபு, விதார்த் முதன்மை வேடத்தில் நடித்த “குய்கோ” படம் வெளியானது.
ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற குய்கோ
எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் ‘குய்கோ’. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
#KUIKO pic.twitter.com/OqlOgNCnpP
— டி.அருள்செழியன் (@darulchezhian) November 12, 2023
இப்படம் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குய்கோ படம் வெளியானதை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி ஒளிபரப்பப்பட்டது. இப்படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள் யோகி பாபு மற்றும் விதார்த் ஆகியோர் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும், இயக்குனர் அருள் செழியனின் கதையும் அதை உருவாக்கிய விதமும் ரசிக்கும் படி இருப்பதாகவும், பொதுமக்களின் வாழ்வியலை அழகாக சொல்லி இருப்பதாகவும் பாராட்டி இருக்கிறார்கள்.
மேலும் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்து இருப்பதாகவும் கூறினார்கள். எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் வெளியாகி இருக்கும் குய்கோ படத்தை பத்திரிகையாளர்கள் பாராட்டி இருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்து இருக்கிறது. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக குய்கோ அமைந்து இருப்பது படக்குழுவினருக்கு பெரிய பலமாக அமைந்து இருக்கிறது.
பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை கவனித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Neeya Naana: ”மதங்களை கடந்த மக்கள் ஒற்றுமை” .. நீயா, நானாவில் நடந்த நெகிழ்ச்சியான விஷயம்..!