மேலும் அறிய

தப்பு பண்ணியானு கேட்டேன்; ஆமானு சொன்னான்: பையனை போலீசில் புடிச்சி கொடுத்தேன் - மன்சூர் அலிகான்!

என்னுடைய பையனை நான் தான் போலீசில் புடிச்சி கொடுத்தேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

நடிகர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முக கலைஞராக சினிமாவில் திகழ்கிறார். வேலை கிடைச்சிடுச்சு என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். ஆனால், விஜயகாந்த் நடிப்பில் வந்த கேப்டன் பிரபாகரன் மூலமாக வில்லனாக அவதாரம் எடுத்தார். இந்தப் படத்தில் வரும் ஆட்டமா தேரோட்டமா என்ற பாடலுக்கு டான்ஸூம் ஆடியிருப்பார். இந்தப் பாடல் இன்றும் டிரெங்கில் தான் இருக்கு. இந்தப் படம் கொடுத்த வரவேற்புக்கு பிறகு வில்லன் ரோலில் ஏராளமான படங்களில் நடித்தார்.

ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். 90ஸ் காலகட்டங்களில் வருடத்திற்கு 10க்கும் அதிகமான படங்களில் நடித்து பிஸியான நடிகராக வலம் வந்தார். இப்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய் நடித்த லியோ படத்தில் நடித்திருந்தார். கடைசியாக கங்குவா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் சில பாடல்களும் பாடியிருக்கிறார். இந்த நிலையில் தான் சமீபத்தில் மன்சூர் அலி கானின் மகன் அலிகான் துக்ளக்கை போலீசார் கைது செய்யப்பட்டார். அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பயன்படுத்தியதாகவும், விற்பனை செய்ததாகவும் கூறி அவரை போலீசார் கைது செய்தனர். அலிகான் துக்ளக்கை கைது செய்து வேனில் அழைத்து செல்வதற்கு முன் தப்பு பண்ணியா, ஏன் தப்பு பண்ணுற என்று பேசும் வீடியோ வெளியானது. 

இந்த நிலையில் தான் மன்சூர் அலி கான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அளித்த பேட்டியில் என்னுடைய மகனை நான் தான் போலீசில் புடிச்சு கொடுத்தேன். அவன் சிகரெட் பிடிப்பானா என்று கூட எனக்கு தெரியாது. அவனை விசாரிக்க அழைத்து சென்ற போது தப்பு செய்தாயா என்று கேட்டேன். ஆமா என்றான். பளார்னு ஒருஅறை விட்டேன். என்னுடைய மகன் மட்டுமல்ல யார் செய்தாலும் தப்பு தப்பு தான். இப்போது பள்ளி குழந்தைகள் வரை கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள் என்று மனம் வருத்தி கூறி இருக்கிறார்.

.

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
Embed widget