Manjummel Boys: சாதனை மேல் சாதனை! மாஸ் காட்டும் மஞ்சும்மல் பாய்ஸ் - தமிழ்நாட்டில் தொடரும் வசூல் வேட்டை!
Manjummel Boys: பெரிதும் கொண்டாடப்பட்டு வரும் மஞ்சும்மல் பாய்ஸ் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வசூலை குவித்துள்ளது.
Manjummel Boys: தமிழகத்தில் ரூ.50 கோடி வசூலித்த முதல் மலையாள படம் என்ற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் பெற்றுள்ளது.
மஞ்சும்மல் பாய்ஸ்:
மலையாளத்தில் சிதம்பரம் இயக்கத்தில், சௌபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்டோர் இயாக்கத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. நேரடி மலையாள சினிமாவான இப்படம் கமல்ஹாசனின் குணா படத்தின் ரெஃபரன்ஸ், மற்றும் குணா குகையில் எடுக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட காரணங்களாலும், விறுவிறு திரைக்கதையாலும் மலையாள ஆடியன்ஸ் தாண்டி தென்னிந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழில் தற்போது வெளியாகியுள்ள கோலிவுட் படங்கள் தாண்டி திரையரங்குகளில் யாரும் எதிர்பார்க்காத வகையில், அரங்கு நிறைந்த காட்சிகளாக மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வரவேற்பினைப் பெற்று வருகிறது. முன்னதாக நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு வாழ்த்து பெற்ற நிலையில், உதயநிதி ஸ்டாலின், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பிற நட்சத்திரங்களையும் சென்னை வந்த படக்குழு சந்தித்தது.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய வசூலை குவித்த மஞ்சும்மல் பாய்ஸ்:
ஐந்து கோடி செலவில் எடுக்கப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் படம் உலகம் முழுவதும் ரூ.176 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. மலையான திரைத்துறையில் அதிகபட்சமாக வசூலித்த திரைப்படம் என்ற பெருமையை பெற்று ரூ.176 கோடி வசூலுடன் மஞ்சும்மல் பாய்ஸ் படம் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.50 கோடி வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் ரூ.50 கோடி வசூலித்த முதல் மலையாள படம் என்ற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் பெற்றுள்ளது.
இரண்டாவது இடத்தில் இருப்பது என்ன?
மலையான திரைத்துறையில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு பிறகு இரண்டாவது இடத்தில் '2018’ படம் ரூ.175 கோடி வசூல் செய்திருந்தது. கடந்த 2023ஆம் அண்டு ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிஃப் ஆலி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதற்கு முன்னதாக, 2016ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான புலிமுருகன் படம் 152 கோடி வசூலை பெற்றது. இதனை அடுத்து, மலையாளத்தில் வெளியான பிரேமலு படம் ரூ.106 கோடி வசூலை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Vijay Car Damage: விஜய்யை தொட நினைத்தாலே சேதாரம் தான்.. கார் கண்ணாடியை உடைத்த ரசிகர்கள்!
Arunthathi Nair: உயிருக்குப் போராடும் விஜய் ஆண்டனி பட நடிகை.. ரசிகர்கள் தொடர் பிரார்த்தனை!