Vijay Car Damage: விஜய்யை தொட நினைத்தாலே சேதாரம் தான்.. கார் கண்ணாடியை உடைத்த ரசிகர்கள்!
GOAT படத்தின் ஷூட்டிங்கிற்காக கேரளாவுக்கு சென்ற நடிகர் விஜய்யின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோட் படத்தின் ஷூட்டிங்கிற்காக கேரளாவுக்கு சென்ற நடிகர் விஜய்யின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, அஜ்மல் அமீர், பிரேம்ஜி அமரன், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
Fans gathered large in number that @actorvijay ‘s car moves inch by inch in #Kerala pic.twitter.com/hiD83IG4xB
— Vijay Makkal Iyakkam Qatar (@qatarvmi) March 18, 2024
சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகும் கோட் படத்தின் சிஜி மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், சென்னையிலும் நடைபெற்றது. இந்த படத்தில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தொடர்ந்து வெளியான செகண்ட் லுக் போஸ்டர்களும் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகின.
இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கிற்காக விஜய் இன்று கேரளா சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பயணித்த கார் உடன் பலரும் தங்கள் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பேரணி சென்றனர். வழியெங்கும் தலைவா.. தலைவா.. தளபதி..தளபதி என கோஷமிட்டு கொண்டே சென்றனர்.
#VijayStormhitskerala #ThalapathyVijay #TVKVijay Thalapathy Vijay Car broken by rush of huge Kerala fans pic.twitter.com/Vdd9NVO9I9
— Mervin Raj (@MervinR80838445) March 18, 2024
இந்நிலையில் ரசிகர்கள் அளவுக்கதிகமாக விஜய்யை காண முண்டியடித்ததால் அவர் பயணித்த கார் கண்ணாடி உடைந்தது. அதுமட்டுமல்லாமல் காரின் பல இடங்களில் சேதம் ஏற்படும் அளவுக்கு ரசிகர்கள் செயல் அமைந்துள்ளது. இங்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜய் கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் அவருக்கு தொடர்ச்சியாக கிடைத்து வரும் வரவேற்பு அரசியல் வட்டாரத்திலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.